உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித்.. விரைவில் என்.வி.ரமணா ஓய்வு!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு யு.யு.லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் நாட்டின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியுள்ளது.

எப்போதும் பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வார். அதுவே வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதியது.
இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இதற்கான பரிந்துரை கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார். புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவரது பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். அவர் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தவுடன், நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்பார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யூயூ லலித் உச்ச நீதிமன்ற நேரடி வழக்கறிஞராக, நேரடி நீதிபதியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதியாக உயர்ந்த இரண்டாவது நீதிபதி ஆவார். இவர் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு 2ஜி விசாரணையில் மத்திய புலனாய்வு பிரிவின் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானார்.
அதேபோல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக என்.வி. ரமணா, ஒரு வருடம் நான்கு மாதம் பதவி வகித்துள்ளார். இவரது காலகட்டத்தில், நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியத்திற்கு தலைமை ஏற்று 11 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 255 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications