இன்னொரு போராட்டத்திற்கு தயாராகும் கரப்பான் பூச்சி ஜனதா? டெல்லியில் நாளை முக்கிய கூட்டம்! பிளான் என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இளைஞர்கள் போராட்டம் மத்திய அரசை உலுக்கியது. இளைஞர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்ததால், போராட்டம் கடந்த மாதம் 25 ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில், டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. மத்திய அரசு அளித்த வாக்குறுதியின் படி நடந்து கொள்ளாவிட்டால் மீண்டும் போராட்டத்திற்கு தயார் என்பதையும் சூசகமாக கரப்பான் பூச்சி ஜனதா வெளிப்படுத்தியுள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? என்பது குறித்து நாளையை கூட்டத்தில் ஆய்வு செய்ய இருப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CJP gearing up for protests again crucial meeting in Delhi tomorrow plan to review Centre promise

மத்திய அரசு கூறியபடியே நடந்து கொண்டுள்ளதா?

நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், போராடும் மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் ராஜினாமா செய்தார். இதையடுத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த சூழலில்தான், மத்திய அரசு கூறியபடி நடந்து கொண்டுள்ளதா? என்பது பற்றி நாளை ஆய்வு செய்யப்படும் என்று சிஜேபி கூறியுள்ளது.

தயாராக இருக்க வேண்டும்

மத்திய அரசு தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்கினால் நாட்டின் இளைஞர்களுக்கு செய்த துரோகமாகவே அது பார்க்கப்படும் எனவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தின் போது அளித்த உறுதியின் படி, நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது பற்றி அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் தற்போது வரை பரிமாறப்படவில்லை. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அனைத்து ஆப்ஷன்கள் பற்றியும் கூட்டத்தில் ஆராய்வோம்.

அமைதியான முறையில் நாடு தழுவிய அளவில் மற்றொரு போராட்டத்தை முன்னெடுப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்வோம். நாட்டின் இளைஞர்களுக்காக அரசு அளித்த வாக்குறுதி அடிப்படையில்தான் கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்தை முடித்துக்கொண்டது. அந்த நல்லெண்ணத்தை பலவீனம் என்று நினைக்க அனுமதிக்க மாட்டோம். நாளை நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு இளைஞர்கள், ஆதரவாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கரப்பான் பூச்சி ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா குற்றச்சாட்டு

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பற்றிய விவரங்களை ஒருங்கிணைத்து தருமாறும், அப்போதுதான் 142 விதியை பயன்படுத்தி, வழக்குகளை ரத்து செய்வது பற்றி பரிசீலிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கோரியிருந்தது. உச்ச நீதிமன்றம் இந்த பட்டியலை மீண்டும் மீண்டும் கோரி வந்தாலும், அரசு இதனை இன்னும் வழங்கவில்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா குற்றம் சாட்டி வரும் நிலையில்தான் புதிய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+