டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் தூய்மையான நகரம்: 6-வது முறையாக இந்தூர் தேர்வு.. தமிழகத்தில் சென்னைக்கு எத்தனையாவது இடம்?

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 6-வது முறையாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை 42-வது இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசு ஸ்வச் சர்வேக்‌ஷன் கணக்கெடுப்பின் படி ஆண்டுதோறும் நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் முறையாக ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்வச் சர்வேக்‌ஷன் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

72 - 45 -7.. அமைதியாக காரியத்தை சாதித்த 72 - 45 -7.. அமைதியாக காரியத்தை சாதித்த

சுத்தம் மற்றும் சுகாதாரம்

சுத்தம் மற்றும் சுகாதாரம்

குறிப்பாக ஸ்வச் பாரத திட்டம்(தூய்மை இந்தியா திட்டம்) எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கண்டறிவதற்காக ஸ்வச் சர்வேக்‌ஷன் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு ஆண்டுதோறும் விருதுகள் சிறந்த தூய்மையான நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சுத்தம் மற்றும் சுகாதாரம் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை பட்டியலிட இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

தூய்மை நகரங்கள்

தூய்மை நகரங்கள்

கடந்த 2016-ஆம் ஆண்டில் முதல் முறையாக எடுக்கப்பட்ட ஸ்வ்ச் சர்வேக்‌ஷன் கணக்கெடுப்பில் 73 நகரங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது, 6-வது ஆண்டாக நடத்தப்பட்ட ஸ்வச் சர்வேக்‌ஷன் கணக்கெடுப்பின் மொத்தம் 4 ஆயிரத்து 354 நகரங்களில் கணக்கெடுப்பு பணியில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

 இந்தூர் முதலிடம்

இந்தூர் முதலிடம்

இதில் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தொடர்ந்து 6-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் தூய்மையான நகரமாக முதல் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2-வது இடத்தை குஜராத் மாநிலத்தின் சூரத் நகரமும் 3-வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை நகரமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்த ஆத்திர பிரதேசத்தின் விஜயவாடா நகரம் இருந்தது.

தமிழகத்தில்..

தமிழகத்தில்..

தற்போது விஜயவாடாவை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு நவிமும்பை முன்னேறியுள்ளது. இந்த வரிசையில் தமிழ்நாட்டில் கோவை நகரம் 42-வது இடத்தையும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை 44-வது இடத்தையும், அடுத்ததாக மதுரை 45-வது இடத்தையும் பிடித்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு பட்டியலில் சென்னை 43-வது இடத்திலும் கோவை 46-வது இடத்திலும் மதுரை 47-வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா முதல் இடம்

மகாராஷ்டிரா முதல் இடம்

ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பஞ்ச்கனி நகரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் 2-வது இடத்தை சத்தீஸ்கார் மாநிலத்தின் படான் என்ற நகரமும் 3-வது இடத்தை மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கர்ஹாத் நகரம் பிடித்துள்ளது. இதேபோல் தூய்மையான கண்டோன்மெண்ட் நகரமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் தியோலாலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 தூய்மை கங்கை நகரம்

தூய்மை கங்கை நகரம்

இதேபோல் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட தூய்மையான கங்கை நகரங்களில் முதல் இடத்தை ஹரித்வாரும், 2-வது இடத்தை வாரணாசியும், 3-வது இடத்தை ரிஷிகேஷ் நகரமும் பெற்றுள்ளது. இதேபோல் ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட தூய்மையான கங்கை நகரங்களில் முதல் இடத்தை பிஜ்னோரும், 2-வது இடத்தை கன்னோஜும், 3-வது இடத்தை கர்முக்தேஷ்வர் நகரமும் பெற்றுள்ளது.

English summary
Madhya Pradesh's Indore has been selected as the cleanest city in the country for the 6th time in a row. Chennai is ranked 42nd in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X