இந்து மதத்துக்கு திரும்பினால் தான் பாலிவுட் வாய்ப்பு.. ஏஆர் ரஹ்மானை சாடிய விஷ்வ இந்து பரிஷத்
டெல்லி: ‛ஆஸ்கர்' விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த தேசிய செய்தி தொடர்பாளர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ‛‛ஏஆர் ரஹ்மான் இந்து மதத்துக்கு திரும்பினால் பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்'' என்று அவர் சாடியுள்ளார். இந்த விமர்சனத்தின் பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம்.
தமிழ் உள்பட இந்தியாவின் பல்வேறு மொழிப்படங்களில் இசையமைத்து புகழ்பெற்றவர் ஏஆர் ரஹ்மான். ஆஸ்கர் நாயகனான இவர் சமீத்தில் பிபிசி ஆசியன் நெட்வொர்க்கிற்கு இண்டர்வியூ அளித்தார். அப்போது அவர், பாலிவுட் திரைப்படங்கள் பற்றி பேசினார். இதுதொடர்பாக ஏஆர் ரஹ்மான் கூறிய கருத்துகள் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளன. அந்த இண்டர்வியூவில் ஏஆர் ரஹ்மான் கூறியதாவது;

"பாலிவுட் திரைத்துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுததாக செவிவழி செய்தி வந்தது. ஆனால் என் கத்துக்கு நேராக எதுவும் நடக்கவில்லை.
நான் சந்தோஷமாக இருக்கிறேன். என் குடும்பத்துடன் ஓய்வெடுக்க எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. நான் வேலை தேடி அலைபவன் அல்ல. வேலை என்னைத் தேடி வர வேண்டும். என் நேர்மை எனக்கு வேலையை பெற்றுத் தரும். நான் எதற்குத் தகுதியானவனோ, அது எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. பாலிவுட்டில் நான் இசையமைத்ததற்கு முன்பாக எந்தத் தென்னிந்திய இசையமைப்பாளரும் இசையமைத்தது இல்லை'' என்று கூறினார். இதில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக ஏஆர் ரஹ்மான் கூறிய கருத்து தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளார்.
இதனை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது: ‛‛இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தன்னை குறிப்பிட்ட ஒரு பிரிவின் தலைவராக மாறிவிட்டார் என்று தெரிகிறது. அந்த பிரிவின் முன்னாள் தலைவராக ஒரு காலத்தில் ஹமீத் அன்சாரி இருந்தார். ஹமீத் அன்சாரி 10 ஆண்டுகளாக சலுகைகளை பெற்று அரசியலமைப்பு பதவிகளை வகித்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியாவை கீழே இழுத்துவிட்டார்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஒரு காலத்தில் அனைத்து இந்தியர்களாலும், இந்து மக்களாலும் போற்றப்பட்டவர். தற்போது தனக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை என்று சுயபரிசோதனை செய்யாமல் அவர் சார்ந்த தொழில்துறை பற்றி அவதூறு செய்கிறார். அவர் ஒரு காலத்தில் இந்துவாக இருந்தார். ஏன் இஸ்லாமிற்கு மாறினார்? இப்போதே ‛கர்வாப்சி' (தாய் மதம் திரும்புதல்) செய்யுங்கள். அவருக்கு மீண்டும் பாலிவுட்டில் வேலை கிடைக்கலாம். ஏஆர் ரஹ்மானின் கருத்துகள் அரசியல்வாதிகளுக்கு பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் ஒரு கலைஞருக்கு பொருந்தாது.
'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications