டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காதீங்க..இந்தியாவுக்கு போலி மிரட்டல் விடும் மேற்கத்திய நாடுகள்.. ஆனால் உண்மை?

Google Oneindia Tamil News

டெல்லி : ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலை இந்தியா எண்ணெய் எரிவாயு உள்ளிட்டவற்றை சலுகை விலை இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அமெரிக்கா தவிர மற்ற நாடுகளே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதாகவும், இவ்விவகாரத்தில் அவை போலியாக செயல்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அடுத்தடுத்த நாட்களில் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்டமேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வி- ராகுல் காந்தியுடன் கலகக் குரல் குழுவின் மூத்த தலைவர் ஹூடா ஆலோசனை 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வி- ராகுல் காந்தியுடன் கலகக் குரல் குழுவின் மூத்த தலைவர் ஹூடா ஆலோசனை

இந்த பொருளாதார தடை விதிப்பு காரணமாக இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு ரஷ்யா சலுகை விலையில் எண்ணெய் இறக்குமதியை வழங்கத் தொடங்கியுள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் அளவுக்கு இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படும் நிலையில் ரஷ்யாவில் இருந்து சுமார் 1.3 சதவீதம் இறக்குமதியாகிறது.இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் சுமார் 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியன் ஆயில் நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் ஒரு பீப்பாய்க்கு 20 முதல் 25 அமெரிக்க டாலர் என்ற சலுகை விலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியானது.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் வாங்கும் நாடுகளில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகியவையும் அடங்கும். இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியை இந்தியா சார்ந்திருப்பதை அரசியலாக்கக்கூடாது என்ற வாதம் திடீரென எழுந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா வற்புறுத்திய நிலையில், மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் இருக்குமதி செய்யும் நிலையில், இந்தியாவின் எரிசக்தித் துறையானது இறக்குமதிகளைச் சார்ந்துள்ளது என்றும், இறக்குமதி செய்யப்பட்ட எரிசக்தியை நாடு சார்ந்திருப்பது "அரசியல்மயமாக்கப்படக் கூடாது" என இந்தியா கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிள்ளது.

எண்ணெய் இறக்குமதி

எண்ணெய் இறக்குமதி

கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றில் தன்னிறைவு கொண்ட நாடுகள், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் இதனை நம்பகத்தன்மையுடன் ஆதரிக்க முடியாது என்றும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை நிறுத்த வளர்ந்து வரும் மேற்கத்திய நாடுகளிம் அழுத்தத்திற்கு இண்டியா மறைமுகமாக பதிலளித்து உள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி கொள்முதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச கோரிக்கை இந்தியாவிடம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு இதுதான் என கூறப்படுகிறது.

தூதரக அழுத்தம்

தூதரக அழுத்தம்

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியா மீது அமெரிக்கா தூதரக அழுத்தத்தை அதிகரித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் பெஸ்கி இதுகுறித்து பேசுகையில், ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்குவதை வைத்து பார்க்கும் போது, ரஷ்ய தலைமைக்கு ஆதரவாக இந்தியா இருப்பது போலவும், இந்த நேரத்தில்ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பது உலக வரலாறு எழுதப்படும் போது யார் பக்கம் நிற்க விரும்புகிறீர்கள் என்பதையும் சிந்தியுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகள்

மேற்கத்திய நாடுகள்

இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் வாங்கும் நாடுகளில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகியவை அடங்கும். ஐரோப்பாவின் முக்கிய நாடுகளைத் தவிர, போலந்து, லிதுவேனியா, ருமேனியா மற்றும் பின்லாந்து போன்ற நாடுகள் இருப்பதும், ஆனால் இந்தியாவை மட்டுமே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Concessional prices from Russia While the United States and France have warned India not to import concessional prices, including oil and gas, it has been reported that countries other than the United States are importing oil and other contents from Russia, and in this case they are acting fraudulently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X