டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விதியை பின்பற்றுங்க, இல்லைனா நாட்டைவிட்டு வெளியேறுங்க! மத்திய அரசு வார்னிங்! கலக்கத்தில் நிறுவனங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: Virtual Private Network எனப்படும் விபிஎன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஐடி துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள சைபர் சட்டங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளன. அதன்படி கிளவுட் சேவை நிறுவனங்கள் மற்றும் VPN நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.

அதில் VPN ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் ஐபி முகவரிகளைப் பராமரிக்க வேண்டும் என்பது முக்கியமானது. இருப்பினும், இந்த விதிகளை பின்பற்ற சில VPN நிறுவனங்கள் தயக்கம் காட்டின.

ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனையை நிறுத்த கோரி சோனியா கடிதம்.. வாயில் துணி கட்டுவோருக்கு தெரியுமா? ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனையை நிறுத்த கோரி சோனியா கடிதம்.. வாயில் துணி கட்டுவோருக்கு தெரியுமா?

வழிகாட்டுதல்கள்

வழிகாட்டுதல்கள்

இதனிடையே புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற விரும்பாத விபிஎன் நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடலாம் என்று ஐடி இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். இணைய விதி மீறல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐடி இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்தை உருவாக்க இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைத்து அர்த்தமுள்ள நிறுவனங்களும் புரிந்துகொள்ளும்.

வெளியேறிவிடுங்கள்

வெளியேறிவிடுங்கள்

இந்தியாவின் விதிகள் மற்றும் சட்டங்களை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று எந்தவொரு நிறுவனமும் சொல்ல வாய்ப்பில்லை. உங்களிடம் முறையான பதிவுகள் இல்லையென்றால், அதைப் பராமரிக்கத் தொடங்குங்கள். நீங்கள் VPN சேவை வழங்கும் நிறுவனமாக இருந்தால், இந்த விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அப்படிப் பின்பற்ற விரும்பவில்லை என்றால், நாட்டில் இருந்து வெளியேறிவிடுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.

 6 மணி நேரம்

6 மணி நேரம்


நாட்டின் புதிய சைபர் சட்டத்தின்படி விபிஎன் நிறுவனங்கள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு தங்கள் சேவைகள் குறித்த தரவுகளைப் பராமரிக்க வேண்டும். இந்த புதிய விதியானது இணையப் பாதுகாப்பில் குறைபாடுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று விபிஎன் நிறுவனங்கள் கூறின. இருப்பினும், இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரித்த அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், "எந்த விதிகளையும் மாற்ற முடியாது. நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்கில் சைபர் தாக்குதலைக் கண்டறிந்தால், அது குறித்து ஆறு மணி நேரத்திற்குள் புகாரளிக்க வேண்டும்.

அடிப்படை

அடிப்படை

சைபர் குற்றம், அதன் தன்மை, வடிவம், ஆகியவை மிகவும் சிக்கலானவை. சைபர் குற்றங்கள் செய்பவர்கள் மிக மோசமானவர்கள். சைபர் குற்றவாளிகள் மிக வேகமாகத் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக புகார் அளித்து விசாரணை செய்வதே குற்றவாளிகளைக் கண்டறிவதில் அடிப்படையான ஒன்று" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

கூகுள், ஃபேஸ்புக், ஐபிஎம் உள்ளிட்ட சர்வதேச ஐடி நிறுவனங்களைக் கொண்ட ஐடிஐ என்ற அமைப்பு, இந்த புகார் அளிக்கும் விதிமுறையைத் திருத்த வேண்டும் எனக் கோரி இருந்தது. இந்த விதி நிறுவனங்களை மோசமாக பாதிக்கலாம் என்றும் இணையப் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் ஆபத்து உள்ளதாகவும் ஐடிஐ கூறி இருந்தது. துறைசார்ந்த வல்லுநர்கள் உடன் ஆலோசனை செய்த பின்னரே, இந்தச் சட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
VPN service providers not ready to comply with new guidelines can leave India: (விபிஎன் நிறுவனங்களை எச்சரிக்கும் மத்திய அரசு) Minister of state for electronics and IT Rajeev Chandrasekhar warns VPN service providers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X