Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா".. ஜோதிமணியின் ஆவேசம்.. திகைத்து பார்த்த பாஜக.. ஏன்?

ஜோதிமணி எம்பி விலைவாசி உயர்வு குறித்து லோக்சபாவில் உரையாற்றினார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "பால் என்பது குழந்தைக்கு கொடுக்கும் பொருள்.. ஒரு ஏழைத்தாய் அதிலும், 100 நாள் வேலையை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு ஏழைத்தாய், எப்படி பாலை வாங்கி அந்த குழந்தைக்கு தர முடியும்? ஒரு நிதியமைச்சர் அதிலும் ஆண்களைவிட கூடுதலாக உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டிய ஒரு நிதியமைச்சர், பாலுக்கு போய் வரி போடலாமா?" என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக கேட்டுள்ளார்.

கடந்த 26ம் தேதி அன்று மக்களவை சபாநாயகரை சூழ்ந்து கொண்டு உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி காங்கிரஸ் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

விலை உயர்வு குறித்த பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர்... அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களை அவரவர் இருக்கையில் உட்காருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா சொன்னார்.. ஆனால் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்த பிறகும்கூட, உறுப்பினர்கள் அமளியை நிறுத்தவில்லை.

துணிச்சல்

துணிச்சல்

இதனையடுத்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ் மற்றும் டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 எம்பிக்களை மழைகால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்... உறுப்பினர்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால், சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப்பெறப்படும் என்றும் சபாநாயகர் கூறியிருந்த நிலையில், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ஜோதிமணி துணிந்து கூறியிருந்தார்.

கனிமொழி

கனிமொழி

பிறகு 4 பேரின் இடைநீக்க உத்தரவை சபாநாயகர் திரும்பப்பெற்றதையடுத்து, கூட்டத்தொடரில் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தொடர் முழுவதுமே விலைவாசி உயர்வு பிரச்சனைகள் எதிரொலித்து வருகிறது.. நேற்று திமுக எம்பி கனிமொழி உட்பட விலைவாசி உயர்வு குறித்த எதிர்ப்புகளை பதிவு செய்ததுடன், பாஜக எம்பிக்களிடமும் அது தொடர்பான காட்டமான கேள்விகளையும் கேட்டிருந்தார்..

சேவகம்

சேவகம்

அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் விலைவாசி குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.. ஜோதிமணி பேசியதாவது: " விவசாயிகளுக்கும், சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கும் உங்கள் ஆட்சியில் ஆதரவு இல்லை.. வெறும் கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் உங்கள் அரசாங்கம் கைகட்டி சேவகம் செய்கிறது.. அண்டை நாடான இலங்கைக்கு சென்று, மின்சார ஒப்பந்தத்தை இந்தியாவில் உள்ள உங்கள் நண்பரான கார்ப்பரேட்டுகளுக்கே கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசுகிறது..

 வெட்கமா இல்லையா

வெட்கமா இல்லையா

இந்தியாவில் வேறு எந்த பிரதமரும் வெளிநாடுகளுக்கு சென்று வெளிப்படையாக பேரம் பேசியதாக வரலாறு கிடையாது.. இதனால் இலங்கை அரசியலில் ஒரு புயல் அடித்து ஓய்ந்து இருக்கிறது.. ஆனால், இதற்கெல்லாம் உங்களுக்கு துளி கூட வெட்கம் இல்லை.. விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார ஒப்பந்தங்கள், ஊடகங்கள் முதல் 5ஜி அலைக்கற்றை வரை உங்கள் நண்பர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.. நீங்கள் ஆட்சிக்கு வந்த 8 வருடங்களில் உங்கள் நண்பர்களில் ஒருவரான அதானி, இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவில் மட்டுமல்ல, உலகிலேயே 4து பெரிய பணக்காரராகிவிட்டார்..

 அற்புதங்கள்

அற்புதங்கள்

இப்படி அற்புதங்கள் நடக்கும் உங்கள் நல்லாட்சியை, நாங்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரிசையில் நின்று வாழ்த்துப்பா பாடாமல், எதிர்த்து நின்று சாதாரண மக்களுக்காக, விலைவாசி உயர்வுக்காக, ஜிஎஸ்டி வரிக்காக போராட்டம் நடத்துகிறோம்.. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், பால், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, ஏன் மின்மயானம் வரை ஜிஎஸ்டி வரியை விதித்திருக்கிறீர்களே..

ஏழைத்தாய்

ஏழைத்தாய்

பால் என்பது குழந்தைக்கு கொடுக்கும் பொருள்.. ஒரு ஏழைத்தாய் அதிலும், 100 நாள் வேலையை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு ஏழைத்தாய், எப்படி பாலை வாங்கி அந்த குழந்தைக்கு தர முடியும்? ஒரு நிதியமைச்சர் அதிலும் ஆண்களைவிட கூடுதலாக உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டிய ஒரு நிதியமைச்சர், பாலுக்கு போய் வரி போடலாமா? அரிசிக்கு போய் வரி போடலாமா? கல்வி மட்டுமே சமூக ஒடுக்குமுறையில் இருந்து காப்பாற்றுகிறது.. அப்படி கல்வி கூட கற்க முடியாமல் பென்சிலுக்கு கூட வரி போடறீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா?

ராஜினாமா

மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை, மக்களிடம் திருப்பி தராமல், அந்த பணமெல்லாம் எங்கேதான் போகுது? இதையெல்லாம் கேள்விகேட்டால், உடனே அமலாக்கத்துறையை அனுப்பி வைப்பீர்கள்.. உங்கள் அமலாக்கத்துறைக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.. பகல் கொள்ளை நடக்குது இங்கே.. ஜிஎஸ்டி வரியை திரும்ப பெறுங்கள்.. இல்லாவிட்டால் ராஜினாமா செய்விட்டு வீட்டுக்கு போங்க" என்று சீறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+