Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி அரசின் ஜீரோ பட்ஜெட்.. விவசாயிகள், ஏழைகள் என யாருக்கும் இதனால் பயனில்லை.. ராகுல் காந்தி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய மோடி அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் எதுவுமில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், ஏழைகள் என யாருக்கும் இந்த பட்ஜெட்டால் பயன் இல்லை என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் 2022- 23-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து முடித்துள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரம் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

மத்திய பொது பட்ஜெட்

மத்திய பொது பட்ஜெட்

விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும் என்றும் விவசாயத்தில் ட்ரோன் தொழில்நுட்பம் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அறிவிப்புகள்

பல்வேறு அறிவிப்புகள்

400 வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்படும் என்றும் 25,000 கி.மீ தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தவிர 5ஜி இணைய சேவைக்கான அலைக்கற்றை ஏலம் இந்த ஆண்டே தொடங்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார நிபுணர்கள் கருது

பொருளாதார நிபுணர்கள் கருது

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதேபோல் பல்வேறு பொருட்களுக்கு வரி குறைப்பு அறிவிப்பும் இல்லை. மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள்,. பொருளாதார நிபுணர்கள் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

Recommended Video

    Union Budget 2022 : யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
    ராகுல் காந்தி கடும் விமர்சனம்

    ராகுல் காந்தி கடும் விமர்சனம்

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பட்ஜெட் குறித்து தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' மோடி அரசு தாக்கல் செய்தது எதுவும் இல்லாத பூஜ்ஜிய பட்ஜெட். ஆகும். இந்த பட்ஜெட்டில் எதுவுமில்லை. ஏழைகள், நடுத்தரவர்க்கத்தினர், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கும் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாத சம்பளகாரர்களுக்கும் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+