மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த கேள்வி.. ஒரே வார்த்தையில் பதில் அளித்து விட்டு சென்ற சோனியா காந்தி
டெல்லி: மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சோனியா காந்தியிடம் கேட்டனர். அதற்கு சோனியா காந்தி அளித்த பதிலை பார்க்கலாம்.
மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்துள்ளது. நேற்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. பிரதமர் மோடி உரையாற்றி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறு பற்றி பேசினார்.

தொடர்ந்து இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கபப்ட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக , மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கு மசோதாவுக்கு கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில் இனி நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு இது நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ளது. நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இது தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்பை இந்த மசோதா ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றம் வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த சோனியா காந்தி, " இந்த மசோதா எங்களுடையது" என்று பதிலளித்துவிட்டு சென்றார்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications