ம.பி தேர்தல் சர்வே! சரியாக பெரும்பான்மையை பெறும் காங்கிரஸ்! ஆனா இந்த முடிவுக்கு கொண்டாடும் பாஜக! ஏன்
டெல்லி: விரைவில் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறித்து புது சர்வே வெளியாகியுள்ளது.
இன்னும் சில வாரங்களில் ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கே காங்கிரஸ் பாஜக இடையே போட்டி நிலவும் நிலையில், அங்கே எந்தக் கட்சி வெல்லும் என்பது குறித்த சர்வே வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேச தேர்தல்: ஜன்மத் அமைப்பு மத்தியப் பிரதேச தேர்தல் குறித்து நடத்திய சர்வே முடிவுகளின் அங்குப் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 230 சீட்கள் உள்ளன. அங்கே ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 116 இடங்களில் வெல்ல வேண்டும். சரியாக அந்த பெரும்பான்மைக்குத் தேவையான 116 இடங்களைக் காங்கிரஸ் வெல்ல வாய்ப்புள்ளதாக ஜன்மத் சர்வே கூறியுள்ளது.
இந்த புதிய சர்வே படி காங்கிரஸ் 113 முதல் 116 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக ரொம்ப எல்லாம் பின்னால் இல்லை. பாஜக 108 முதல் 111 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜுன் சமாஜ் கட்சிக்கும் மத்தியப் பிரதேசத்தில் சற்று ஆதரவு இருக்கும் நிலையில் அவர்கள் 3 அல்லது 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பாஜகவுக்குச் சந்தோஷம் ஏன்: இதை சர்வே முடிவுகளை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பிடிக்கும் என்று சர்வே வந்துள்ள நிலையில், பாஜக ஆதரவாளர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதற்கு என்ன காரணம் என்றால் கடந்த சர்வேவை வைத்துப் பார்த்தால் இது பாஜக வளர்ந்து வருவதையே இது காட்டுவதாகக் கூறுகிறார்கள்.
கடந்த முறை ஜன்மத் அமைப்பு வெளியிட்ட சர்வேயில் காங்கிரஸ் 117 -119 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. அதில் இருந்து 4 இடங்கள் காங்கிரசுக்கு இந்த முறை சர்வேயில் குறைந்துள்ளது. மறுபுறம் பாஜக 101- 103 இடங்களை மட்டும் பிடிக்கும் எனக் கடந்த முறை கூறப்பட்ட நிலையில், இந்த முறை அவர்கள் கூடுதலாக ஏழு சீட்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜகவுக்கான ஆதரவு ம.பி-இல் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்து வருவதையே இது காட்டுவதாகவும் வாக்குப்பதிவு நடக்கும் சமயத்தில் இதைவிடக் கூடுதலாக ஆதரவு அதிகரிக்கும் என்றும் பாஜக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதன் மூலம் வாக்குப்பதிவு சமயத்தில் காங்கிரஸ் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்லும் என்றே அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர்: அதேபோல சத்தீஸ்கர் மாநிலச் சட்டசபைத் தேர்தல் குறித்து முடிவுகளையும் ஜன்மத் அமைப்பு வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கரில் இப்போது பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அங்கே மொத்தம் 90 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 46 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கே காங்கிரஸ் 50- 52 இடங்களில் எளிதாக வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அங்கே எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு 32 முதல் 34 இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications