வரி விதிப்புக்கு மோடி சரியான பதிலடி கொடுத்துட்டார்.. சிலிண்டர் விலை உயர்வு! ராகுல் காந்தி காட்டம்
டெல்லி: ஏற்கனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி பரிசு கொடுத்துள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும், விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மற்றொரு பரிசுதான் இந்த கியாஸ் விலை உயர்வு என்றும், சிலிண்டர் விலையை உயர்த்தி வரி விதிப்புக்கு மோடி சரியான பதிலடி கொடுத்துட்டார் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் இடையே ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ. 2 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.550-க்கு விற்பனை செய்யப்படும். இதர வகை சிலிண்டர் விலை ரூ.803ல் இருந்து ரூ.853-க்கு விற்பனை செய்யப்படும். சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை.
இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.43,000 கோடியை ஈடுகட்டும் வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். சந்தையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்பியும், எதிக்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சிலிண்டர் விலையை உயர்த்தி வரி விதிப்புக்கு மோடி சரியான பதிலடி கொடுத்துவிட்டார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:- "இறுதியாக வரி விதிப்புக்கு தக்க பதிலடியை மோடி கொடுத்துவிட்டார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை வாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மற்றொரு பரிசாக அரசின் இந்த கொள்ளை அமைந்துள்ளது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications