லடாக்கில் 2 பேர்.. தமிழகத்தில் ஒருவர்.. இந்தியாவில் மொத்தம் 39 பேர்.. தீவிரம் அடையும் கொரோனா!
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. லடாக்கில் இருவருக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சீனாவில் வுஹனின் உருவான வைரஸ் தற்போது உலகை மொத்தமாக ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவில் தொடங்கி இருந்தாலும் தற்போது 85 நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. மிக மிக சிறிய தீவுகளில் கூட இந்த வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
106065 பேர் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிப்பு. சீனாவில்தான் அதிகபேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சீனாவில் 86045 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 3600 கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர் . சீனாவில் 3095 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர்.

இந்தியா எப்படி
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக ஏற்பட்டு வருகிறது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.இவர் கடந்த சில வாரங்கள் முன் தாய்லாந்து மற்றும் மலேசியா சென்று திரும்பி உள்ளார். உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டு இருக்கிறது.

தீவிரம்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலீயல் லடாக்கில் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. ஈரானுக்கு சென்ற வந்த இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் காஷ்மீருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்கிறார்கள். இவர்களை தனியாக வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தமிழகம் எப்படி
தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்றுதான் இவருக்கு இந்த வைரஸ் தாக்கியது.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் தற்போது சோதனை செய்த முடிவு செய்துள்ளனர்.

மொத்தம் எவ்வளவு
கேரளாவில் 5 பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. இதில் 16 இத்தாலியை சேர்ந்த பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் உள்ளது. இவர்கல தனியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவும் வேகம் 17% அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதை சமாளிக்க திணறி வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications