டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்.. முக்கிய ஆலோசனை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி முக்கியமான மீட்டிங் ஒன்றை டெல்லியில் நடத்தி உள்ளார்.

உலகில் இருக்கும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் மிக அதிக அளவில் தினசரி கேஸ்கள் பதிவாகி வருகின்றன. இந்தியாவில் தற்போது 12,485,509 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 164,655 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.11,629,289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

Coronavirus in India: Narendra Modi meets higher officials after the surge in cases

இந்தியாவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மட்டும் 49497 கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக ஏற்கனவே மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

கொரோனா விதிகளை அமல்படுத்தப்படுத்த வேண்டும், மக்களை முறையாக கண்காணிக்க வேண்டும், மாஸ்க், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா விதிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில்தான் தற்போது பிரதமர் மோடி முக்கியமான மீட்டிங் ஒன்றை டெல்லியில் நடத்தி உள்ளார்.

கேபினெட் அதிகாரிகள், செயலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பல்வேறு மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பரவல் குறித்தும், கொரோனா வேக்சின் அளிக்கப்படுவது குறித்தும் பிரதமர் மோடி பேசி உள்ளார்.

கொரோனாவின் புதிய பரவலை எப்படி கட்டுப்படுத்துவத, வேக்சின் அளிக்கப்படும் வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளார். இந்த ஆலோசனையை தொடர்ந்து முக்கியமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Coronavirus in India: Narendra Modi meets higher officials after the surge in cases suddenly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X