டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

50 நாட்களுக்குப் பின் இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு 1.52 லட்சமாக குறைந்தது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 50 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்புகள் 1.52 லட்சமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக, ஒருநாள் பாதிப்புகள் இரண்டு லட்சத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

Recommended Video

    குட் நியூஸ்: 4வது நாளாக… 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல கொரோனா தொற்றுக்கு நம் நாட்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து, 20,26,092 ஆக இன்று பதிவாகியுள்ளது.

    ஆக்டிவ் கேஸ்கள் குறைவு

    ஆக்டிவ் கேஸ்கள் குறைவு

    கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 88,416 குறைந்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சை பெறுவோரின் விழுக்காடு வெறும் 7.22% ஆகும். தொடர்ந்து 18-வது நாளாக, புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,38,022 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். புதிதாகக் குணமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குமான இடைவெளி 85,288 ஆக உள்ளது.

    மொத்தம் 34 க்ஜோடி பரிசோதனைகள்

    மொத்தம் 34 க்ஜோடி பரிசோதனைகள்

    பெருந்தொற்றின் துவக்கம் முதல் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,56,92,342 ஆகும். இதன் மூலம் குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த விழுக்காடு, 91.60% ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,83,135 பரிசோதனைகளும், இதுவரை இந்தியாவில் மொத்தம் 34.48 கோடி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி வீதம்‌ 9.04 சதவிகிதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 9.07 சதவிகிதமாகவும் சரிந்துள்ளது. இந்த விழுக்காடு, ஏழு நாட்களாகத் தொடர்ந்து 10 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.

    21.31 கோடி பேருக்கு தடுப்பூசிகள்

    21.31 கோடி பேருக்கு தடுப்பூசிகள்

    நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 21.31 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்டத் தகவலின்படி, 30,28,295 முகாம்களில், மொத்தம் 21,31,54,129 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    கையிருப்பு தடுப்பூசிகள்

    கையிருப்பு தடுப்பூசிகள்


    சுமார் 1.75 கோடி (1,75,48,648) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 தினங்களுக்கு 2.73 லட்சம் (2,73,970) தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது.

    English summary
    As part of continued decline in the daily new cases, India has reported lowest Daily New Cases in last 50 days with 1.52 Lakh cases. The country has recorded less than 2 lakh Daily New Cases for 4 continuous days now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X