டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிற மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்.. ஒரு கோச்சுக்கு 54 பேர் தான்.. பாயிண்ட் டூ பாயிண்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுனில் சிக்கித் தவித்த பிற மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல 2 வாரங்களுக்கு Shramik Express சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று இந்த சிறப்பு Shramik Express ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

Coronavirus lockdown: Shramik Express trains for Migrant Workers Only

வெள்ளிக்கிழமையன்று 5 Shramik Express ரயில்கள் இயக்கப்பட்டன. சனிக்கிழமையன்று இந்த எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமையும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

பொதுவாக இந்த ரயில்களில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பொதுவாக ஒரு பெட்டியில் 72 பேர் பயணிக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் 54 பேர் மட்டுமே ஒரு பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். ஒரு ரயிலுக்கு மிக அதிகபட்சமாக 1200 பேர்தான் பயணிக்க முடியும்.

இந்த ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டுகள் கட்டணமாகப் பெறப்படும். அத்துடன் சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கான ரூ30; கூடுதல் கட்டணமாக ரூ20 என மேலும் ரூ50 வசூலிக்கப்படும். பயணிகளிடம் இருந்து மாநில அரசுகள் கட்டணத்தை வசூலித்து ரயில்வே நிர்வாகத்திடம் செலுத்திவிடும். 12 மணிநேரத்துக்கும் மேலாக பயணம் மேற்கொள்ளும் ரயில்களில் ஒரு நேரத்துக்கு மட்டும் உணவு வழங்கப்படும். மாநில அரசுகள், உணவுப் பொட்டலங்களை பயணிகளுக்கு வழங்க ரயில்வே நிர்வாகம் ஆலோசனை கூறியுள்ளது

லாக்டவுன் காலத்து பட்டினிச் சாவுகள் குறித்து எந்த ஒரு கணக்குமே இல்லையே... ப. சிதம்பரம்லாக்டவுன் காலத்து பட்டினிச் சாவுகள் குறித்து எந்த ஒரு கணக்குமே இல்லையே... ப. சிதம்பரம்

Recommended Video

    வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் பணி தொடங்கியது.. கிளம்பியது ரயில்கள் - வீடியோ

    இச்சிறப்பு ரயில்கள் அனைத்தும் பாயிண்ட் டூ பாயிண்ட் அடிப்படையில்தான் இயக்கப்படும். அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 31 சிறப்பு ரயில்களை கேட்டிருக்கிறது. இதற்கான அட்வான்ஸ் தொகையையும் கூட ஜார்க்கண்ட் நிர்வாகம், ரயில்வேக்கு கொடுத்திருக்கிறது.

    English summary
    The special Shramik Express trains are being run to ferry migrant labourers during the Coronavirus lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X