டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜி20 நாடுகளில் இந்தியாதான் பெஸ்ட்.. ஐஎம்எப் சொல்லிவிட்டது.. கவலை வேண்டாம்.. ஆர்பிஐ கவர்னர் நம்பிக்கை

ஜி20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சிதான் அதிகமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜி20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சிதான் அதிகமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா காரணமாக ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சரிவை கட்டுப்படுத்தும் வகையில் முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அவர் தனது பேட்டியில், உலகமே கொரோனா காரணமாக மோசமான பொருளாதார சரிவை சந்தித்து இருக்கிறது. இந்தியாவிலும் இந்த பொருளாதார சரிவு எதிரொலிக்கும். ஆனால் இதில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்கும்.

தீவிரமாக கவனித்து வருகிறோம்

தீவிரமாக கவனித்து வருகிறோம்

உலகம் முழுக்க கொரோனா காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை கவனித்து வருகிறோம். தினமும் இது தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். சிறு குறு தொழில்கள் இதனால் மோசமாக பாதிக்க போகிறது. ஆனால் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடையும். அடுத்த வருடம் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை சந்திக்கும்.

இந்தியாவின் வளர்ச்சி அதிகம்

இந்தியாவின் வளர்ச்சி அதிகம்

ஜி20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சிதான் அதிகமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மற்ற ஜி20 நாடுகளில் மோசமான பொருளாதார சரிவு இருக்கும். ஆனால் இந்தியாவில் அவ்வளவு பெரிய சரிவு இருக்காது. அடுத்த வருடம் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும். இந்தியா மிக வேகமாக பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வரும்.

விரைவில் சரியாகும்

விரைவில் சரியாகும்

ஆனால் சர்வதேச பொருளாதாரம் சரியாகும் நிலையில் இல்லை. இந்தியாவின் ஏற்றுமதி துறை தற்போது பாதிக்கப்பட்டு உள்ளது. இதை சரி செய்ய நாங்கள் போதுமான முயற்சிகளை செய்து வருகிறோம். இந்தியாவின் ஏற்றுமதி 34.57% சரிவை சந்தித்து இருக்கிறது. ஆனால் வேறு உலக நாடுகளில் இதை விட அதிகமாக ஏற்றுமதி சரிவை சந்தித்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் மீண்டு வருவோம்

நாம் மீண்டு வருவோம்

இந்த சரிவில் இருந்து விரைவில் நாம் மீண்டு வருவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே போல் ஆர்பிஐ தன் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை 0.25% குறைத்து இருக்கிறது. தற்போது ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.75% ஆக குறையும் என்று அறிவித்து உள்ளது. ஏற்கனவே ரெப்போ ரேட் 4.4%ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 15 வருடத்தில் தற்போது இருக்கும் ரெப்போ ரேட்தான் மிகவும் குறைவானது ஆகும்.

English summary
Coronavirus: The growth projection for India by IMF is the highest among G20 says RBI Governor with hope on future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X