ALERT: கோவேக்சின் தடுப்பூசி போட்டாச்சா.. அப்ப "இதை" மட்டும் செய்யாதீங்க.. முக்கிய தகவல்!
பயோடெக் நிறுவனம் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, பாரசிட்டமால் (Paracetamol) மற்றும் வலி மாத்திரைகளை (Pain killers) எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது... இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது..
இந்தியாவில் மறுபடியும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது... 3வது அலையின் தொடக்க நிலையில் சுகாதார வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்தபடியே இருக்கிறார்கள்.
அனைவரும் மாஸ்க் போட வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்தியபடியே இருக்கிறார்கள்..

பாதிப்பு
வைரஸின் தாக்கத்தையும், பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

எச்சரிக்கைகள்
எனவே, இது தொடர்பான சில தகவல்களும், ஓரிரு எச்சரிக்கைகளும் வெளிவர தொடங்கியுள்ளன... காரணம், தடுப்பூசியிலேயே பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.. அதனால், கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை தற்போது வெளியாகியுள்ளது.. கோவாக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது...

பயோடெக் நிறுவனம்
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, பாரசிட்டமால் (Paracetamol) மற்றும் வலி மாத்திரைகளை (Pain killers) எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அதில், "கோவாக்சின் தடுப்பூசி போட்ட சிறுவர்களுக்கு மூன்று 500 மில்லிகிராம் பாரசிட்டமால் மாத்திரைகளை தடுப்பூசி மையங்கள் பரிந்துரைப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது... கோவாக்சின் போட்ட பிறகு பாரசிட்டமால் அல்லது வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தேவையில்லை.
Recommended Video

டெஸ்ட்கள்
மற்ற கொரோனா தடுப்பூசிகளை போட்ட பின் பாரசிட்டமால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், கோவாக்சின் போட்டவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரை தேவையில்லை" என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட 30,000 நபர்களிடம் இதற்கான டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது.. அப்போது, சுமார் 10-20 சதவீத நபர்களுக்கு பக்க விளைவுகள் இருந்தனவாம்.. இவற்றில் பெரும்பாலானவை லேசானவை மற்றும் 1-2 நாட்களுக்குள் குணமாகக்கூடியவை என்பதால், அதற்கு மருந்து தேவையில்லை என்றும் டாக்டரை அணுகிய பின்னரே மருந்து பரிந்துரைக்கப்படும் என்றும் பாரத் பயோடெக் அந்த அறிக்கையில் விளக்கமாக தெரிவித்துள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications