டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரேசில், பிரிட்டிஷ்.. இந்திய வகை கொரோனா வைரஸ்களுக்கு கோவாக்சின் சூப்பர் மருந்து.. ஆய்வுகளில் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரேசில், பிரிட்டிஷ் மற்றும் இந்திய வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாரத் பயோடெக்கின் கோவிட் -19 தடுப்பூசியான 'கோவாக்சின்' பிரேசில் வகை கொரோனா வைரஸான SARS-CoV-2, B.1.128.2 க்கு எதிரான சாத்தியமான செயல்திறனை நிரூபித்துள்ளது என்று தேசிய மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் வைராலஜி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரேசிலிய கொரோனா வைரசுஸ் அமெரிக்காவின் நியூயார்க்கில் காணப்பட்ட E484K வைரஸில் இருந்து உருவமான பிறழ்வு ஆகும்.

திருப்பதி: ஏழுமலையான் கோவில் ஆஸ்தான மண்டப கடையில் தீ விபத்து - 10 கடைகள் எரிந்து சாம்பல்திருப்பதி: ஏழுமலையான் கோவில் ஆஸ்தான மண்டப கடையில் தீ விபத்து - 10 கடைகள் எரிந்து சாம்பல்

ஆய்வில் தகவல்

ஆய்வில் தகவல்

ஐ.சி.எம்.ஆர் நடத்திய முந்தைய ஆய்வில், கோவாக்சின் இங்கிலாந்து வகை கொரோனா மற்றும் இந்திய வகை கொரோனா பல வைரஸ்க்ளுக்கு எதிராக செயல்படுவது உறுதியானது. தற்போது பிரேசில் வைரஸ்க்கு எதிராகவும் செயல்படுவது தெரியவந்துள்ளது.. இதன் மூலம் கொரோனா வைரஸின் பல வகைகளுக்கு எதிராக கோவாக்சின் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அனைத்து வகை வைரஸ்

அனைத்து வகை வைரஸ்

இந்த ஆய்வின் முடிவுகளைப் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் இது பல வகைகளுக்கு எதிராக கோவாக்சினின் சாத்தியமான செயல்திறனை நிரூபிக்கிறது, மேலும் இந்த தடுப்பூசி அனைத்து வகை பிறழ்வு வைரஸை எதிர்க்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று ஒகுஜென் தடுப்பூசியின் தலைவர் டாக்டர் சதீஷ் சந்திரன் கூறினார்.

தடுப்பூசி

தடுப்பூசி

ஒகுஜென் என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு உயிரியல் மருந்து நிறுவனமாகும், இது அமெரிக்க சந்தைக்கு கோவாக்சினை உருவாக்கி வருகிறது. நிறுவனத்தின் இணை நிறுவனர் டாக்டர் சங்கர் முசுனூரி கூறுகையில், "இன்றுவரை நடத்தப்பட்ட அனைத்து ஆய்வுகளிலும் கோவாக்சின் தொடர்ந்து வலுவான முடிவுகளைக் காட்டுகிறது. இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த தடுப்பூசி நம் தேசிய மருந்து களஞ்சியத்தில் சேர்க்க ஒரு முக்கியமான கருவி என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம் என்றார்.

விண்ணப்பித்துள்ளது

விண்ணப்பித்துள்ளது

ஒகுஜென் குழு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு கோவேக்சினை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்தது, தற்போது அவசரகால பயன்பாட்டு அங்கீகார விண்ணப்பத்திற்கு விடாமுயற்சியுடன் தயாராகி வருகிறது. 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையின் சமீபத்தில் பகிரப்பட்ட இரண்டாவது இடைக்கால முடிவுகளில், கோவாக்சின் 78 சதவிகித ஒட்டுமொத்த செயல்திறனையும், கடுமையான கோவிட் -19 கேஸ்களில் 100 சதவீத செயல்திறனையும் நிரூபித்துள்ளது. இதனால் ஒகுஜென் நிறுவனம் உற்சாகமாக உள்ளது.

English summary
Bharat Biotech’s Covid-19 vaccine ‘Covaxin’ has demonstrated potential effectiveness against the Brazil variant of SARS-CoV-2, B.1.128.2, in a new study conducted by the Indian Council of Medical Research (ICMR) in association with the National Institute of Virology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X