குழந்தைகளுக்கான தடுப்பூசி செப்டம்பரில் ரிலீஸ்... பள்ளிகளில் போட முடிவு - எய்ம்ஸ் இயக்குநர்
உருமாறும் கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ள மூன்றாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்படும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
டெல்லி: குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை நடைபெற்று வருவதாகவும், செப்டம்பர் மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். குழந்தைகளுக்கு போடும் வகையில், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு சைடஸ் காடிலா நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.
உருமாறும் கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ள மூன்றாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்படும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இரண்டு தவணைகளாக இந்தத் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன.

கொரோனா உருமாற்றம்
கொரோனா உருமாறி வருவதால், அதற்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா, வரும் காலத்தில் பல்வேறு வகையிலும் கொரோனா உருமாற்றம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அப்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நோய் எதிர்ப்பு சக்தி
புதுவகை வைரஸ்களை எதிர்கொள்ள 3வது தவணை தடுப்பூசி தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் வழங்கும் இரண்டாம் தலைமுறை தடுப்பூசி தயாரிக்கப்படும் என்று கூறினார்.

கூடுதல் தவணை தடுப்பூசி
இதுதொடர்பான சோதனை நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டபிறகு, கூடுதல் தவணை தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரந்தீப் குலேரியா தெரிவித்தார்.

எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா
குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை நடைபெற்று வருவதாகவும், செப்டம்பர் மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல, குழந்தைகளுக்கு போடும் வகையில், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு சைடஸ் காடிலா நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் ரந்தீப் குலேரியா தெரிவித்தார். செப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாராக இருக்கும் என்றும், பள்ளிகளில் படிப்படியாக தடுப்பூசி போடப்படும் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications