கொரோனா குறையவில்லை.. மெத்தனம் கூடாது.. உலக நாடுகளுக்கு உலக சுகாதார மையம் அலர்ட்!
டெல்லி: கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது உருவத்தை மாற்றிக் கொண்டு உலக நாடுகளை அலற வைத்து வருகிறது. டெல்டா மாறுபாடு பரவுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 5,00,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுமார் 9,300 உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.

சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை
இதன்மூலம் கொரோனா வைரஸ் மெதுவாக இல்லை என்பது தெளிவாக தெரிவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில நாடுகளில் தடுப்பூசி அளவு கடுமையான பாதிப்புகள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகளை சேர்க்கப்படுவதை குறைக்கிறது. அதே வேளையில் உலகின் பெரும் பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது.

இறப்பு விகிதம் அதிகரிப்பு
இந்த பகுதிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை படுக்கைகள் இல்லாதது மற்றும் அதிக இறப்பு ஆகியவற்றை எதிர்கொள்கின்றன என்று சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். ஆறு பிராந்தியங்களில் ஐந்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஆப்பிரிக்காவில் இறப்பு விகிதம் இரண்டு வாரங்களில் 30% அதிகரித்து 40% ஆக உயர்ந்துள்ளது.

காரணம் என்ன?
உலகளவில் வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு, மெதுவாக தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் மாஸ்க் அணிதலை கைவிடுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்க மறத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்துவது ஆகியவை பாதிப்பு அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறுகிறார்.

கவனம் வேண்டும்
எல்லோரும் பாதுகாக்கப்படுகிறார்கள். எல்லாமே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இப்போது உலகில் கொரோனா எங்கும் இல்லை என்பது மிகவும் ஆபத்தான அனுமானமாகும் என்று உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். உலக நாடுகள் தளர்வுகள் அளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் ஆபத்தை வரவழைத்து விடக் கூடாது என்றும் உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications