இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 36,571 பேர் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 540 பேர் பலியாகியுள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,23,58,829 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 540 பேர் பலியாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் 21 கோடி பேரை கொரோனா வைரஸ் தொட்டுள்ளது. 19 கோடி பேர் குணமடைந்திருந்தாலும் உலகம் முழுவதும் 44 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா முதல் அலைக்கு அமெரிக்கா முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கொரோனா இரண்டாவது அலைக்கு இந்தியா முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 4 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா 35,178 ஆக இருந்த நிலையில், நேற்று 35,178 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,23,58,829 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 39,555 பேர்குணமடைந்துள்ளதால் 3,15,61,635 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 540 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,33,589 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 150 நாட்களில் இல்லாத வகையில் மிக குறைவாக நாடு முழுவதும் 3, 63,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.54% ஆக உள்ளது என்றும், உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை 50.26 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரேநாளில் 18,86,271 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் 5722 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரேநாளில் 54,71,282 பேருக்கு கொரோனா டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா உலக பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.07 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.87 கோடி பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே வேகமாக பரவுகிற திறன் கொண்டுள்ள டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்குமா என்பது குறித்து இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மே மாதம் 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 1ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 3,58,983 பேரிடம் இருந்து பெறப்பட்ட 8,11,624 சோதனை முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆல்பா வைரசுடன் ஒப்பிடுகையில் டெல்டா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன. ஆனால் புதிய தொற்றுகளுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை கொண்டுள்ளன.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. டெல்டா வைரசைப் பொறுத்தமட்டில், 2 தடுப்பூசி போட்ட பின்னரும், தடுப்பூசி போடப்படாதவர்களைப் போலவே வைரஸ் உச்ச நிலையை கொண்டுள்ளது. ஆல்பா வைரசை பொறுத்தவரையில், தடுப்பூசிக்கு பிந்தைய நோய்த்தொற்று உள்ளவர்களின் வைரஸ் உச்ச நிலை குறைவாக உள்ளது.
பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் 2 டோஸ்கள், புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக ஆரம்பத்தில் நல்ல செயல்திறனை கொண்டுள்ளன. ஆனால் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்து விடுகிறது. தடுப்பூசிகள் கொரோனா வருவதற்கான வாய்ப்பை குறைக்கின்றன. அதே நேரத்தில் கொரோனா வருவதற்கான வாய்ப்பை தவிர்ப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications