கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,02,544 பேர் மீண்டனர் - 27.20 லட்சம் பேருக்கு சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,02,544 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,37,28,011 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27.20 லட்சமாக குறைந்துள்ளது.

கொரோனா இரண்டு அலை தீவிரமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மக்கள் ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றனர்.

Covid 19 India reports: 3,02,544 people recovered in a single day

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,22,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,52,447 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,02,544 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,37,28,011 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 4,454 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,03,720 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குணமடையும் விகிதம் 88.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 27,20,716 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 19,60,51,962 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+