7 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்.. 17,930 பேருக்கு கொரோனா பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,930 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் இந்தியாவில் பதிவான மிக குறைவாக தினசரி பாதிப்பு இதுதான்.

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக தினசரி கொரோனா கேஸ்கள் குறைந்து கொண்டே வருகின்றன. கடந்த வாரங்களில் தினமும் இந்தியாவில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கொரோனா கேஸ்கள் பதிவானது.

முக்கியமாக கேரளாவில் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வந்தது. கேஸ்கள் 25 ஆயிரத்திற்கும் கீழ் செல்லாமல் இருந்ததால் எங்கே மூன்றாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வந்தது. அக்டோபர் மாத இறுதியில் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்குமா என்ற அச்சம் நிலவியது.

குறைந்தது

குறைந்தது

ஆனால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,930 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,24,264 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் பலியாகி உள்ளனர். 4,50,621 பேர் இதுவரை இந்தியாவில் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 9,470 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் இந்தியாவில் பதிவான மிக குறைவான தினசரி பாதிப்பு இதுதான்.

கேரளா

கேரளா

கேரளாவில் தினசரி கேஸ்கள் குறைந்ததுதான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய முக்கிய காரணம் ஆகும். கேரளாவில் நீண்ட நாட்களுக்கு பின் 10 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. கேரளாவில் 9,470 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 26,173 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 46,44,211 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 1,13,196 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,75,578 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 2,486 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,39,514 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 63,99,464 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 33,006 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,80,621 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 37,875 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,32,322 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 10,395 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,76,936 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக 1344 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,768 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,24,916 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 16,252 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 14 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திராவில் கொரோனா காரணமாக 20,56,628 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 629 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 14250 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 20,34,244 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,134 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+