இந்தியாவில் 3வது அலைக்கான வார்னிங்கா? ஒரே நாளில் அதிகரித்த கொரோனா.. ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,806 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம இன்று காலை தெரிவித்து இருந்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி இந்தியாவில் 38,792 புதிய கேஸ்கள் தான் பதிவாகி இருந்தது.

இதை ஒப்பிட்டு பார்த்தால் ஒரே நாளில் கிடுகிடுவென கொரோனா பாதிப்பு உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பின் 3வது அலையின் தொடக்கமா என்ற சந்தேகத்தை இந்த அதிகரிப்பு காட்டுகிறது.

இந்தியாவின் சுகாதார அமைச்சகம் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி அளவில் முதல் நாளில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாநிலங்களிடம் அறிக்கையாக பெற்று இறுதி நிலவரத்தை வெளியிடும்.

கொரோனா

கொரோனா

அந்த வகையில் இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரத்தையும் வெளியிட்டது. இந்த அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,806 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகி இருந்தது. இதேபோல் ஒரே நாளில் நாடு முழுவதும 39,130 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் . நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 581 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

தொடக்க நிலையா

தொடக்க நிலையா

இந்நிலையில் புதன்கிழமை நிலவரப்படி இந்தியாவில் 38,792 புதிய கேஸ்கள் தான் பதிவாகி இருந்தது. ஒரே நாளில் 3014 பேருக்கு அதிகமாக கொரோனா பரவி உள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் 3வது அலையின் தொடக்கத்திற்கு இந்தியா வந்துவிட்டதா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா நிலவரம்

இந்தியா நிலவரம்

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,09,87,880 ஆகும். இதில் 3,01,43,850 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டனர். நாடு முழுவதும் 4,32,041 இறப்புகள் கொரோனாவால் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,11,989 ஆக உள்ளது.

பரிசோதனைகள்

பரிசோதனைகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வெளியிட்ட தகவலின் படி , ஜூலை 14 வரை நாடு முழுவதும இதுவரை 43 கோடியே 80 லட்சத்து 11,958 மாதிரிகள் இதுவரை கொரோனா உள்ளதா என பரிசோதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று ஒரு நாளில் மட்டும் 19,43,488 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு

மத்திய அரசு

கடந்த 24 மணி நேரத்தில் 34,97,058 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 39,13,40,491 தடுப்பூசி மருந்துகள் இதுவரை நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரட்டிப்பு

கொரோனா இரட்டிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது.

Recommended Video

    India-வில் Coronavirus 3rd Wave அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை
    பாதிப்பு எவ்வளவு

    பாதிப்பு எவ்வளவு

    கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும், அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 அன்று 90 லட்சத்தையும் தாண்டியது. இறுதியாக டிசம்பர் 19 அன்று ஒரு கோடியைத் தாண்டியது. ஆனால் இந்தியா மே 4 அன்று இரண்டு கோடியின் கடுமையான மைல்கல்லைக் கடந்தது. ஜூன் 23 அன்று மூன்று கோடியை தாண்டி உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மூனறாவது அலைக்கான அச்சம் அதிகரித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+