12-14 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி எப்போது?..மத்திய அரசு அதிகாரி கூறிய குட் நியூஸ்..முழு விவரம்
டெல்லி: இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தற்போது 15-17 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொடிய கொரோனா வைரஸ் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. டெல்டா, ஆல்பா என்று பலவிதமாக வைரஸ் மாறுபாடு அடைந்து மக்களை அதிர்ச்சியிலேயே வைத்து வருகிறது.

இந்தியாவை ஆட்டிபடைக்கும் கொரோனா
இந்த வரிசையில் மாறுபாடு அடைந்த ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவை ஆட்டிபடைத்து வருகிறது. ஓமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிவேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 2.50 லட்சம் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தடுப்பூசிதான் முக்கியம்
கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். இதனால்தான் உலக நாடுகள் விரைவாக தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய 3 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்ததாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மொத்தம் எத்தனை?
இதன்பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரிவுபடுத்தப்பட்டு, தற்போது 15-17 வயதுடைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் மூன்றாவது டோஸ் தடுபூசியான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 91 கோடி முதல் டோஸ், 65 கோடி இரண்டாம் டோஸ் மற்றும் 43 லட்சம் பூஸ்டர் டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன

12-14 வயதுடைய சிறுவர்கள்
தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து விட்டது. தடுப்பூசி போடுவதற்கு முதலில் தயக்கம் காட்டிய மக்கள் அதன்பிறகு பாதிப்பை உணர்ந்து ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Recommended Video

மத்திய அரசு அதிகாரி கூறிய குட் நியூஸ்
இது தொடர்பாக கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறுகையில், ' 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத இறுதியில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும்' என்று கூறினார். ஜனவரி இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 7.4 கோடி சிறுவர்களுக்கு முதல் டோஸ் செலுத்த இலக்கு உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications