இந்தியாவில் கொரோனாவால் 16,326 பேர் பாதிப்பு - 666 பேர் மரணம்

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு இன்று 16,326 ஆக பதிவாகியுள்ளது. ஒரேநாளில் 666 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 16,326 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 666 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா 24 கோடி மக்களை பாதித்துள்ளது. இந்தியாவில் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID19: India reports 16,326 fresh cases and 666 deaths

கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தினசரியும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது 20 ஆயிரத்திற்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று கொரோனா பாதிப்பு 15,786 ஆக பதிவான நிலையில் இன்று தினசரி பாதிப்பானது 16 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா மரணங்கள் என்பது 300ற்கும் கீழ் பதிவாகி வந்தது. நேற்று கொரோனா உயிரிழப்பு 231 ஆக இருந்த நிலையில் இன்று கொரோனா பலி எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது.

இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கொரோனாவால் புதிதாக 16,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,59,562 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 17,677 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,35,32,126 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 173728 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,53,708 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,01,30,28,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 68,48,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+