'இந்தியா' கூட்டணி முதல் விக்கெட் அவுட்?வெளியேறும் சிபிஎம்? போபால் மீட்டிங் கேன்சல் பரபர பின்னணி!
டெல்லி: "இந்தியா" கூட்டணியின் அக்டோபர் 2 போபால் பொதுக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு மேலும் பரபரப்பான காரணங்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவுக்கு எதிரான "இந்தியா" கூட்டணியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அணியில் இடதுசாரிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

சரித்திரத்தில் இடதுசாரிகள்: இந்திய வரலாற்றில் இதற்கு முந்தைய எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளில் 'இடதுசாரிகள்' எனப்படும் சிபிஐ, சிபிஎம் ஆகியவை மிக முக்கிய பங்கு வகித்துள்ளன. 1989-ல் தேசிய முன்னணி உருவாக்கப்பட்ட போது பாஜகவும் இடதுசாரிகளும் வெளியில் இருந்து விபி சிங் அரசாங்கத்தை ஆதரித்த வரலாறு உண்டு. காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி அரசுக்கும் இடதுசாரிகள் தொடக்கத்தில் ஆதரவு தந்த சரித்திரமும் உண்டு.
சிபிஎம் சிக்கலான நிலை: ஆனால் தற்போதைய 'இந்தியா" கூட்டணியில் பட்டும் படாமலுமேயே இடதுசாரிகள் இருந்து வந்தனர். சிபிஎம் கட்சியைப் பொறுத்தவரையில் கேரளாவில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி; மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி. இந்த முரண்பாடுகளுடன் "இந்தியா" அணிக்கும் இடதுசாரி கட்சிகள் வந்தன.
பொலிட்பீரோ கூட்டம்: ஆனால் பாட்னா, பெங்களூர் கூட்டத்தில் அமைதி காத்த இடதுசாரிகள் மும்பை கூட்டத்தில் முறுகலை வெளிப்படுத்தியது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவில் சிபிஎம் கட்சி இடம் பெற்றிருந்தாலும் இந்த நிமிடம் வரை பெயரைத் தரவில்லை. இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சிபிஎம் பொலிட் பீரோ கூட்டமும் விவாதித்துள்ளது.
சிபிஎம் நிலைப்பாடுதான் என்ன?: மேலும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2-ந் தேதி இந்தியா கூட்டணி பொதுக் கூட்டம் நடத்த வேண்டாம் என சிபிஎம் வலியுறுத்தியதாம். அதாவது ம.பி.யில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி இருகட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. இதனால் அங்கு பொதுக் கூட்டம் நடத்துவது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது சிபிஎம் கருத்து. இதனிடையே திடீரென மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத், ம.பி. போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என தன்னிச்சையாக அறிவித்ததையும் சிபிஎம் ஏற்கவில்லையாம். இந்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழுதானே வெளியிட வேண்டும் என்கிறது சிபிஎம்.
சிபிஎம் வெளியேறும்?: சிபிஎம் கட்சியை பொறுத்தவரை இந்தியா கூட்டணி முறையான கட்டமைப்புடன் குழப்பம் இல்லாமல் செயல்பட வேண்டும்; ஆளுக்கு ஆள் அறிவிப்பு வெளியிடக் கூடாது என்கிற கறார்தனத்தை காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ வழக்கம் போல பெரிய அண்ணன் பாணியில் செயல்படுகிறது. இதனால் இடதுசாரிகள் நீண்டகாலம் இந்தியா கூட்டணியில் இடம் பெறுவது சந்தேகமே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications