டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண் வேட்பாளர்களில் எத்தனை பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது? அறிக்கையில் பகீர் தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் 110 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் எஞ்சிய 59 தொகுதிகளுக்கான ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட லோக்சபா தேர்தல் மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை நடைபெறுகிறது.

இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு மரண அடி காத்திருக்கிறது... சொல்வது சத்ருகன் சின்ஹா இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு மரண அடி காத்திருக்கிறது... சொல்வது சத்ருகன் சின்ஹா

பெண் வேட்பாளர்கள்

பெண் வேட்பாளர்கள்

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் 15 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் வழக்கு

கிரிமினல் வழக்கு

அதன்படி லோக்சபா தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 110 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 8 பேர் குறித்து விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

14 பேர் மீது வழக்கு

14 பேர் மீது வழக்கு

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் 26 சதவீதம் பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. அதாவது காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் 54 பெண் வேட்பாளர்களில், 14 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

18 பேர் மீது வழக்கு

18 பேர் மீது வழக்கு

பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் 34 சதவீதம் பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது போட்டியிடும் 53 பேரில் 18 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

பகுஜன் சமாஜ் 2 பேர்

பகுஜன் சமாஜ் 2 பேர்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் 23 பெண் வேட்பாளர்களில் 6 பேர் கிரிமினல் வழக்குகள் உள்ளன இது 26 சதவீதம் ஆகும். இதேபோல் பகுஜன் சமாஜில் 24 பேரில் 2 பேர் மீது கிரிமினல் வழக்குள் உள்ளன.

English summary
15% women candidates declared criminal cases according to a report by the Association for Democratic Reforms
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X