மறுபடியுமா.. அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 120 அமெரிக்க டாலரை எட்டியது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தடைப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்க விலையும் விண்ணை நோக்கி சென்றது.

 120 அமெரிக்க டாலர்

120 அமெரிக்க டாலர்

அதன்படி நேற்று ப்ரெண்ட் பெஞ்ச்மார்க் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 120.50 அமெரிக்கா டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பெஞ்ச்மார்க் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 116 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கும் உயர்ந்திருந்தது. இது தொடரும் பட்சத்தில் நேரிடையாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை ஏற்படுத்தலாம்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

தற்போதைய இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம். அமெரிக்காவில் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் தேவை, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை 90 சதவீதம் அளவுக்கு நிறுத்த ஐரோப்பிய நாடுகள் முடிவுகள் செய்துள்ளது ஆகியவை பிரதானமாக உள்ளன.இது நேரிடையாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் நேற்று மாலை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான பொருளாதார தடையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் குழாய் மூலம் வழங்கும் சேவைகளுக்கு தற்காலிக விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தி அதிகரிக்க மறுப்பு

உற்பத்தி அதிகரிக்க மறுப்பு

மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஓபெக்ப்ளஸ் (opec+) குழுமம் மறுப்பு தெரிவித்து வருகிறது. இதுவும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் இந்த குழுமத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு மாதத்துக்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை சுமார் 4,00,000 பீப்பாய்களாக உயர்த்துவது பற்றி விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல்கள் சிறை பிடிப்பு

கப்பல்கள் சிறை பிடிப்பு

இதுதவிர ஹார்முஸ் ஜலசந்தியில் வழியான கப்பல் போக்குவரத்துக்கும் கவலை நிலவுகிறது. தற்போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்த கடல் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. நேற்று கிரேக்க கொடியுடன் சென்ற 2 கப்பல்களை ஈரான் சிறை பிடித்தது. இதனால் ஈரான் வழிப்பாதையை தவிர்க்க வேண்டும் கிரேக்க எண்ணெய் நிறுவனங்கள் கப்பல்கள்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

 எதிர்ப்பு

எதிர்ப்பு

இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை உயர்வால் சில நாடுகள் கொதித்து எழுந்துள்ளன. ஹங்கேரி உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யா மீதான கச்சா எண்ணெய் கொள்முதல் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்த துவங்கி உள்ளனர். ஆனால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+