Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நுபுர் சர்மா சர்ச்சை! வேலையை காட்டிய ஹேக்கர்கள்.. அரசு இணையதளங்கள் முடக்கம்! பின்னணியில் அல்கொய்தா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜகவைச் சேர்ந்த 100 சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான 70க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை கூறினார்.

இது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைப் பகிர்ந்த டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிண்டால், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் நூறு சர்மாவும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நுபுர் சர்மா விவகாரம்

நுபுர் சர்மா விவகாரம்

நுபுர் சர்மாவின் இந்த செயலுக்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவின் தூதர்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தன. மேலும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. டெல்லி ஜும்மா மசூதியில் தொடங்கிய இந்தப் போராட்டமானது தற்போது நாடு முழுவதும் கிளை பரப்பியுள்ளது. பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு விதிக்கும் அளவுக்கு போராட்டத்தின் தீவிரம் சென்று கொண்டிருந்த நிலையில் தாலிபான்கள் மற்றும் அல்கொய்தா அமைப்பினர் விவகாரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.

இணையதளங்கள் முடக்கம்

இணையதளங்கள் முடக்கம்

இந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் இந்தியா முழுவதும் உள்ள 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதில் உங்கள் மதம் உங்களுக்கு என் மதம் எனக்கு என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். DragonForce Malaysia என்ற ஹேக்டிவிஸ்ட் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தொடர் தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் இணையதளம், (https://www.indembassyisrael.gov.in/), தேசிய வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (http://www.manage) இலக்காகக் கொண்டன. .gov.in/) மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் இ-போர்ட்டல் (https://www.agrigoaexpert.res.in/icar/task/), ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

ஹேக்கர்கள் குழு

ஹேக்கர்கள் குழு

மொத்தத்தில் இந்த ஹேக்கர்கள் குழு சுமார் 70 இணையதளங்களை ஹேக் செய்தது. இதேபோல் டெல்லி பப்ளிக் பள்ளி, பல்வேறு மாநிலங்களில் அரசு பவன்கள், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. மகாராஷ்டிராவில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இணையதளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. ஹேக் செய்யப்பட்ட இணையதளங்கள் "உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்". என ஹேக்கர்கள் ஆடியோ மற்றும் செய்தி வடிவில் பதிவிட்டுள்ளனர்.

ஹேக்கர்கள் செய்தி

ஹேக்கர்கள் செய்தி

மேலும் ஒரு செய்தியை அனுப்பியுள்ள ஹேக்கர்கள், அனைத்து முஸ்லீம் ஹேக்கர்கள், உலகெங்கிலும் உள்ள அனைத்து ஹேக்கர்கள், மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையதளத்தை ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்திய அதிகாரிகள் மீட்டெடுக்க முடிந்தாலும், ICAR இணைய தள பக்கங்களில் ஒன்று இன்னும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 8 மற்றும் ஜூன் 12க்கு இடையில் இந்திய அரசாங்க தளங்கள் மற்றும் தனியார் போர்ட்டல்கள் சிதைக்கப்பட்டதை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    Nupur Sharma-க்கு Dutch MP ஆதரவு | Pak-ல் இந்து கோவில்கள் மீது தாக்குதல் | Ajit Doval விளக்கம்
    டிராகன்போர்ஸ் ஹேக்கர்கள்

    டிராகன்போர்ஸ் ஹேக்கர்கள்

    '1877' என அடையாளம் காணப்பட்ட மற்றொரு ஹேக்கர் குழுவால் இதே போன்ற தாக்குதல்கள் தொடங்கப்பட்டன. இது மற்ற இணையதளங்களில் மஹாராஷ்டிரா ஜூடிசியல் அகாடமியின் வலைத்தளத்தை சிதைத்தது. இந்த குழு வெளியிட்டுள்ள செய்தியில், "இந்திய மக்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் தங்கள் மதத்தை தேர்வு செய்ய சுதந்திரமாக உள்ளனர், ஆனால் எங்கள் மதத்தை (இஸ்லாம்) தாக்க அனுமதிக்க மாட்டோம்". ஜூன்-ஜூலை 2021இல், தென்கிழக்கு ஆசியாவின் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய அரசாங்கத்தின் வலைத்தளங்களில் டிராகன்ஃபோர்ஸ் அழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+