மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ450 கோடி நிதி + ரூ561.29 கோடி வெள்ள மேலாண்மை திட்டம்- அமித்ஷா
டெல்லி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை வெள்ள மேலாண்மை திட்டம் ரூ561.29 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருமழையை கொட்டித் தீர்த்தது. மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. தமிழ்நாட்டில் இன்றும் மிக்ஜாம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அக்கடிதத்தில், "தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய 'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த கடிதத்தை இன்று பிரதமர் மோடியிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு நேரில் வழங்கினார்.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக ரூ450 கோடியும் ஆந்திராவுக்கு ரூ493.60 கோடியும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அத்துடன் சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டம் ரூ561.29 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசு நிற்கிறது, விரைவில் இயல்பு நிலைக்கு வருவதை உறுதி செய்யும். சென்னை வடிநிலத் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக ரூ.561.29 கோடி மதிப்பிலான முதலாவது நகர்ப்புற வெள்ளத் தணிப்புத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதில் ரூ.500 கோடி மத்திய உதவியும் அடங்கும் இந்தத் தணிப்புத் திட்டம் வெள்ளத்தைத் தாங்கும் வகையில் சென்னையை மாற்ற உதவும். நகர்ப்புற வெள்ளத் தணிப்பு முயற்சிகளின் தொடர்ச்சியில் இது முதல் முறையாகும், மேலும் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கான ஒரு பரந்த கட்டமைப்பை உருவாக்க உதவும். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக, எஸ்.டி.ஆர்.எஃப் இரண்டாம் தவணையின் மத்திய பங்கான ரூ .493.60 கோடியை ஆந்திராவிற்கும், ரூ .450 கோடியைத் தமிழகத்திற்கும் முன்கூட்டியே வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே அதே தொகையின் முதல் தவணையை இரு மாநிலங்களுக்கும் வழங்கியது
"சென்னை பெரும் வெள்ளத்தை எதிர்கொள்கிறது, கடந்த எட்டு ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாகும். பெருநகரங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்." ''மிக்ஜாம் கோரப் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை கடுமையாகப் பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டிருந்தாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, இதனால் நிலையான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம், நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு வருவதை உறுதி செய்வோம். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications