டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விர்ரென உயர்ந்த கொரோனா பாதிப்பு! அச்சமூட்டும் பலி எண்ணிக்கை! ஒரே நாளில் இத்தனை பலியா? முழு தகவல்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும் நிலையில் நேற்று பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பலத்த பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது.

சுமார் மூன்று வருடங்களாக கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

 மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று- காங். மூத்த தலைவர் கமல்நாத் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று- காங். மூத்த தலைவர் கமல்நாத்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வரும் சூழலில் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 12000 என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 12 ஆயிரத்தைத் தாண்டி பதிவானது. இந்நிலையில்தான் இன்று கூட பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

மீண்டும் உயர்வு

மீண்டும் உயர்வு

நேற்று முன்தினம் 9,923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நேற்று 12 ஆயிரத்துக்கு மேலே அதாவது, 12,249 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 13 ஆயிரத்து 313 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

கொரோனா காரணமாக 38 பேர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 948ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 972 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 36 ஆயிரத்து 27 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி அளவு

தடுப்பூசி அளவு

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 83 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 196 கோடியே 66 லட்சத்து 11 ஆயிரத்து 973 பேருக்கும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 லட்சத்து 91 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Daily corona exposure in India has been volatile for the past few days, with yesterday's crossing 12,000 and today crossing 13,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X