ஆன்லைனில் ஆசிட்! கருகிய மாணவியின் முகம்.. பிளிப்கார்ட், அமேசானுக்கு டெல்லி மகளிர் ஆணையம் எச்சரிக்கை
டெல்லி: டெல்லியில் பட்டப்பகலில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பிளிப்கார்ட் மூலம் ஆசிட் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் 'அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியின் துவாரகா பகுதியில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் பள்ளி செல்வதற்காக 12ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கிறார்.
அப்போது முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் மாணவி மீது ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஏமாற்றம்
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மாணவி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு முகத்தில் மட்டும் 8% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கண்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, "அரோரா எனும் 18 வயதுடைய இளைஞனும் பள்ளி மாணவியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து மாணவி பிரிந்து சென்றுள்ளார். இதனை ஏற்காத அரோரா என்ன செய்வதென்று தெரியாமல் தனது நண்பர்களான ஹர்ஷித் அகர்வால் (19), வீரேந்திர சிங் (22) ஆகியோரிடம் புலம்பியுள்ளார்.

மூளைச்சலவை
இதனையடுத்து நண்பர்கள் இந்த மோசமான ஐடியாவை கொடுத்திருக்கிறார்கள். திட்டத்தின்படி ஆன்லைன் போர்ட்டலில் ஆசிடை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இதற்கு இ-வாலட் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். பிளிப்கார்ட்டிலிருந்து இந்த ஆசிட் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மறுநாள் மாணவி மீது ஆசிட் வீச தயாராகியுள்ளனர். இதற்கிடையில் அரோராவை மற்ற இருவரும் நன்றாக மூளைச்சலவை செய்துள்ளனர். இதன் காரணமாக அரோரா இத்தாக்குதலுக்கு முழுவீச்சில் தயாராகியுள்ளார்.

திட்டம்
அடுத்தநாள் காலையில் அகர்வால் பைக்கை ஓட்ட அரோரா பின்னாள் அமர்ந்துகொண்டு அந்த பகுதியை சுற்றி நோட்டம் விட்டுள்ளனர். காலை 7 மணி என்பதால் பெரிய அளவுக்கு ஆள் நடமாட்டம் இருந்திருக்கவில்லை. இதனையடுத்து இரண்டாவது ரவுண்டில் கையோடு ஆசிடை கொண்டு சென்று பஸ் ஸ்டாபில் நின்றிருந்த மாணவியின் முகத்தின் மீது வீசியுள்ளனர். ஆசிட் பட்ட அடுத்த சில நொடிகளில் மாணவி துடிதுடித்துள்ளார். இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதற்கடுத்து இந்த பைக்கையும் அரோராவின் செல்போனையும் வீரேந்திர சிங் மறைவான இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

கடிதம்
இதன் காரணமாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. பின்னர் நேற்று மூவரையும் நாங்கள் கைது செய்தோம். மாணவி தற்போது வரை ஐசியுவில்தான் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று கூறியுள்ளனர். ஆசிட் பிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் 'அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில் "ஆபத்தான ஆசிட் உங்கள் இணையதளத்தில் எளிதாக கிடைக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானது" என்று குறிப்பிட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications