3வது நாளாக மோசமான நிலையில் காற்றின் தரம்.. சுவாசிக்க திணறும் டெல்லி மக்கள்.. மருத்துவர்கள் வார்னிங்
டெல்லி: மூன்றாவது நாளாக இன்றும் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் நீடிக்கின்றது.
தீபாவளிக்கு பின்பாக வருடா வருடம் டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
இந்த நிலையில்தான் கடந்த முறையை போல இந்த முறையும் டெல்லியில் காற்று மாஸை கட்டுப்படுத்த தீபாவளி அன்று வெடிவெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தடையை மீறி டெல்லியில் பல இடங்களில் வெடிகள் வெடிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் பல பகுதிகளில் காற்று மாசு அளவு 600 புள்ளிகளை தாண்டியது.

தரம் என்ன?
அபாயகரமான அளவை டெல்லி காற்று மாசு எட்டியது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் டெல்லியில் காற்று மாசு அளவு மோசமான நிலையில் நீடிக்கின்றது. அபாயகரமான நிலையில் இருந்து நேற்று மோசமான நிலைக்கு மாறிய டெல்லி காற்று மாசு அளவு இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது. டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் 436 ஆக உள்ளது.

டெல்லி
அதேபோல் டெல்லியை சுற்றி இருக்கும் நகரங்களிலும் காற்றின் தரம் மோசமாகி உள்ளது. காசியாபாத்தில் காற்று மாசு புள்ளிகள் 458 ஆக உள்ளது. அதேபோல் நொய்டாவில் 455 ஆக உள்ளது. பரிதாபாத்தில் 449 ஆக உள்ளது. டெல்லி தவிர்த்து ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்டில் காற்றின் தரம் மோசமாக உள்ளது.

தீபாவளி
தீபாவளிதான் இந்த காற்று மாசுபடுத்தலுக்கு முக்கிய காரணம் ஆகும். அதே சமயம் நேற்று உத்தரகாண்ட் பகுதியில் சில இடங்களில் விவசாய நிலைகளில் வைக்கோல்களை எரித்துள்ளனர். பழைய விளை நிலங்களில் உள்ள விவசாய குப்பைகளை மக்கள் எரித்ததும் புகை தொடர்ந்து நீடிக்க ஒருவகையில் காரணம் ஆகி உள்ளது. டெல்லியில் இதனால் பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வருகின்றன. அதேபோல் வயதானவர்களுக்கு கண் எரிச்சல், இருமல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எய்ம்ஸ்
இந்த நிலையில் காற்று மாசு குறித்து எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், மோசமான தரம் கொண்ட காற்று நுரையீரலை பாதிக்கும். இது கொரோனா காலம் என்பதால் இரட்டை பாதிப்பிற்கு வாய்ப்பு உள்ளது. நுரையீரலில் இதனால் வீக்கம் ஏற்பட வாய்ப்புகளும் உள்ளன. உடலின் மற்ற பகுதிகளையும் இதனால் புகை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications