டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை- இலவச மின்சாரம்- மிரள வைக்கும் காங். டெல்லி தேர்தல் அறிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 8- ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் அனல் பறந்து வருகிறது. இதனிடையே டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் ஜாமியா பல்கலை, ஷாகீன் பாக் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றதால் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Delhi Assembly Elections 2020: Congress releases manifesto with freebies

இந்நிலையில் தமிழகத்தின் திராவிட கட்சிகளை மிஞ்சும் வகையில் அதிரடியான இலவச அறிவிப்புகளை பாஜக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது. தற்போது பாஜகவை மிஞ்சும் வகையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில், வேலையில்லா இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு தலா ரூ5,000 மற்றும் ரூ7,500 ஊக்கத் தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் வகையில் ரூ5000 கோடி நிதியம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும் டெல்லி முழுவதும் மலிவு விலை உணவகங்களாக, தமிழகத்தின் அம்மா கேண்டீன் போல 100 இந்திரா கேண்டீகளை உருவாக்கப் போவதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. இதில் ரூ15-க்கு சாப்பாடு விற்பனை செய்யப்படும்.

என்ன இப்படி கலாய்ச்சிட்டாரே.. மோடியின் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட ராகுல்.. வைரல் டிவிட்!என்ன இப்படி கலாய்ச்சிட்டாரே.. மோடியின் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட ராகுல்.. வைரல் டிவிட்!

அதேபோல் 300 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுமாம். 300 முதல் 400 யூனிட்டுகளுக்கு 50% மட்டும் மின் கட்டணம் வசூலிக்கப்படுமாம். அரசு பணிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு; பெண்களுக்கான மகிளா கேண்டீன் ஆகியவை அமைப்போம் என்றும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தெரிவித்துள்ளது.

நர்சரி படிப்பு முதல் மருத்துவ படிப்பு வரை அரசு கல்வி நிறுவனங்களில் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

English summary
Delhi Congress party manifesto promises an unemployment allowance of Rs 5000 for graduates and Rs 7500 for post-graduates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X