Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரத்திய போலீஸ்.. அவசர கதியில் நடந்த டெல்லி கார் வெடிப்பு! உண்மை பிளான் வேறயாம்! வெளியான பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த திங்கள்கிழமை மிக மோசமான கார் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் வெடிப்பு தொடர்பாகத் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கார் வெடிப்பு திட்டமிடப்பட்ட ஒன்று இல்லை என்றும் வேறு ஒரு இடத்திற்கு வெடிகுண்டை மாற்றும்போது அது எதிர்பாராத விதமாக நடந்த வெடித்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

டெல்லியில் செங்கோட்டை அருகே கார் ஒன்று திங்கள்கிழமை மாலை வெடித்துச் சிதறியது. ஹூண்டாய் i20 காரில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். செங்கோட்டைக்கு அருகிலுள்ள சாந்தினி சவுக்கில், நாட்டின் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றான இப்பகுதியில், இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.

Delhi car Blast Near Red Fort Triggered By Panic and IED Was Unfinished revealed in investigation

தெரியாமல் நடந்த விபத்து

இதற்கிடையே டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகச் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்ட தாக்குதல் இல்லை என்றும் வெடிகுண்டுகளைக் கொண்டு சென்றபோது அச்சத்தில் தவறாக அதை வெடிக்க வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

துரத்திய போலீஸ்

கடந்த திங்கள்கிழமை நாடு முழுக்க தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தீவிரவாதிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெடிபொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

குறைவான தாக்கம்

இந்த புதிய தகவல் தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கலாம் என்ற முதற்கட்டத் தகவலுக்கு நேர்மாறாக இருக்கிறது. அதாவது வெடிகுண்டை எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.. அதிகாரிகளும் இப்போது அந்தக் கோணத்திலேயே விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.. வெடிகுண்டை வெடிக்க வைத்த நபர் அதைச் சரியாகப் பொருத்தவில்லை என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே அதன் தாக்கம் குறைவாக இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.

அதிகாரிகள் சொல்வது என்ன

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது தெரியாமல் நடந்த விபத்து போலவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றவாளி அச்சத்தில் இருந்ததால்.. அதிகபட்சச் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் IEDஐ இயக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். வெடிப்பு நடந்தபோது i20 கார் போக்குவரத்து நெரிசலில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அந்த டிராபிக் மற்றும் சாலையில் இருக்கும் பள்ளங்கள் கூட வெடிகுண்டிற்கு ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவித்தன.

அதாவது குற்றவாளிகள் வெடிகுண்டுகளை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ முயன்றபோது இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்பதை உறுதி செய்வதாகவே இது இருக்கிறது. இந்த வழக்கு இப்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

சந்தேக நபர்

கார் வெடிப்பு ஏற்பட்ட வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை ஓட்டி வந்த நபர், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உமர் நபி என்ற மருத்துவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கார் வெடிப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான், அவர் தனது கைப்பேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, குடும்பத்தினருடனும் தொடர்பைத் துண்டித்துத் தலைமறைவானார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+