டெல்லி: இன்னும் உயரும் யமுனை நீர்மட்டம்- குடிநீர் பிரச்சனை ஏற்படும்..கெஜ்ரிவால் சொன்ன 8 பாயிண்டுகள்!
டெல்லி: ஹரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் அணையில் இருந்து பெருமளவு நீர் திறந்துவிடப்படுவதால் யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் டெல்லி மாநகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் யமுனை நதியின் இரு கரைகளையும் தொட்டபடி பெருவெள்ளம் பாய்ந்தோடுகிறது. டெல்லி மாநகருக்குள்ளும் பல பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. 1978-ம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லி மாநகரம் மிக கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
1) டெல்லியில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படும்.
2 ) அத்தியாவசிய சேவைகள் துறையை தவிர அனைத்து அரசு அலுவலகங்கள் மூடப்படும்; பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணிபுரியலாம்.
3) தனியார் அலுவலகங்களும் வீடுகளில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4) தற்போதைய குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 3 மூடப்பட உள்ளன. இதனால் அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
5) அத்தியாவசியப் பொருட்களைத் தவிர இதர சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
6) முகாம்களில் கழிப்பிட வசதி உள்ளிட்டவைகளுக்கு பிரச்சனைகள் இருக்கின்றன. இதனால் பள்ளிக்கூடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
7) வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.
8) யமுனை நதிநீர் மட்டம் மேலும் சில மீட்டர் உயரக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications