26 வயது இளம் பெண் புகார்- சோனியா காந்தியின் 71 வயது உதவியாளர் மாதவன் மீது பலாத்கார வழக்கு பதிவு!
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் 71 வயது உதவியாளர் பிபி மாதவன் மீது டெல்லி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சோனியா காந்தியின் நேர்முக உதவியாளர் பி.பி. மாதவன் மீது டெல்லி உத்தம் நகர் காவல்நிலையத்தில் கடந்த 26-ந் தேதி 26 வயது இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: என்னுடைய கணவர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 2020-ம் ஆண்டு காலமாகிவிட்டார்.

என்னுடைய கணவர் மரணத்துக்குப் பின்னர் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எனக்கு வேலை வாங்கி தருமாறு மாதவனை தொடர்பு கொண்டேன். அவர் என்னிடம் நேர்காணல் நடத்தினார். அப்போது வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலில் பேசினார்.
இதன்பின்னர் உத்தம் நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே ஒரு இடத்துக்கு என்னை அழைத்துச் சென்று காரில் பலவந்தமாக ஏற்றினார். அங்கிருந்து சுந்தர் நகரில் ஒரு ஃப்ளாட்டில் என்னை அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் டெல்லி உத்தம் நகர் போலீசார் மாதவன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை டெல்லி உத்தம்நகர் போலீசார் உறுதி செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications