சிஏஏவில் பலிகடா.. உண்மையை மறைத்த போலீஸ்..ஜாமியா வன்முறையில் ஷார்ஜில் இமாமை விடுவித்த டெல்லி கோர்ட்
சிஏஏ எதிர்ப்பு தொடர்பான போராட்டம் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் வன்முறையானது. இதில் உண்மை குற்றவாளிகளை மறைத்ததாக போலீசாரை சாடிய நீதிமன்றம் ஷார்ஜில் இமாமை விடுவித்தது
டெல்லி: 2019 டெல்லி ஜாமியா மில்லியா வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷர்ஜீல் இமாம், சபூரா சர்கார், ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்டவர்களை நிரபராதி எனக்கூறி வழக்கில் இருந்து டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. மேலும் ‛‛உண்மையான குற்றவாளிகளை காவல்துறையால் கைது செய்ய முடியாத நிலையில் இவர்கள் பலிகிடாவாக்கப்பட்டுள்ளனர்'' என நீதிமன்றம் கருத்து தெரிவித்து காவல்துறையை கடிந்து கொண்டது.
இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்தியாவின் அண்டை நாடுகளாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியா வரும் மதசிறுபான்மையினர்களுக்கு குடியுரிமை வழங்குவதாகும்.
அதன்படி அதன்படி 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும். இது கடந்த 2019ல் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.

ஜாமியா பல்கலைக்கழக வன்முறை
அதாவது இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக கூறி நாடு முழுவதும் பல இடங்களில் முஸ்லிம் மக்கள் போராட்டத்தை தொடங்கினர். கல்லூரி, பல்கலைக்கழங்களில் பேராட்டம் நடத்தன. சில இடங்களில் மோதல் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்தில் 2019டிசம்பர் மாதம் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள், மாணவ அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இடையே மோதல் உருவாகி வன்முறையானது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த போராட்டத்தில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்ததாக முன்னாள் ஜேஎன்யூ மாணவரும், மாணவர் அமைப்பை சேர்ந்தவருமான ஷார்ஜில் இமாம் ஆசிப் இக்பால் தன்ஹா, சபூரா சர்கார் உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு என்பது டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. டெல்லி கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி அருள் வர்மா விசாரித்து வந்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. கூடுதலாக 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

விடுவித்த நீதிமன்றம்
இந்நிலையில் தான் வழக்கில் இருந்து ஷர்ஜீல் இமாம், சபூரா சர்கார், ஆசிப் இக்பால் தன்ஹா, அபுசார், உமைர் அகமது, முகது சோயிப், முகது அன்வர், முகமது காசிப், முகமது சோயிப், முகமது அன்வர், முகமது காசிம், முகமது பிலால் நதீம், சாக்சார் ராஜா உள்ளிட்டவர்களை நீதிமன்றம் இன்று விடுவித்தது.

பலிகடாவாக்கப்பட்டுள்ளனர்
இந்த வேளையில் நீதிபதி போலீசாரை கடுமையாக சாடினார். அதாவது உண்மையான குற்றவாளிகளை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. இதனால் வழக்கில் இவர்கள் குற்றவாளிகளாக பலிகடாக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் தன்னிச்சையாக தவறான தகவல்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை இழுத்தபடித்துள்ளனர். இது நீதித்துறைக்கு தீங்கு விளைவிக்கும் என கடிந்து கொண்டார். இருப்பினும் இந்த வழக்கில் முகமது இலியாஸ் என்பவர் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது.

சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல்
இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் ஷர்ஜீல் இமாம், ஆசிப் இக்பால் தன்ஹா, சபுரா சர்கார் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள். இருப்பினும் இவர்கள் தற்போதும் சிறையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஷர்ஜீல் இமாம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் ஐஐடி மும்பையில் பிடெக், எம்டெக் படிப்பை முடித்துவிட்டு முதுகலை பட்டப்படிப்பை ஜேஎன்யுவில் படித்தார். அதன்பிறகு பிஎச்டியையும் மேற்கொண்டார். இந்நிலையில் தான் டெல்லியில் நடந்த வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications