காற்று மாசு! மூச்சுத்திணறிய டெல்லி! "ஆக்ஸிஜன் லெவல் ஓகே" .. இன்று முதல் பள்ளிகள் திறப்பு
டெல்லி: காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து டெல்லியில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும். இந்த நிலையில் உலகளவில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம் பெற்றுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் மக்கள் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தனர். டெல்லியில் காற்றின் தர குறியீடு 300 புள்ளிகளை தாண்டி இருந்தது.
இது மிகவும் மோசமான பாதிப்பு ஆகும். இதனால் கடந்த 9ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளதால் இன்று முதல் அனைத்து அரசு , அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதே வேளையில் விளையாட்டு போட்டிகள், சட்டசபை உள்ளிட்டவை அடுத்த 1 வாரத்திற்கு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் கடந்த 8ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தீபாவளி பண்டிகை அன்று காற்றின் தரம் மேம்பட்டிருந்தது. காற்றின் தரம் 50 க்கு கீழ் இருந்தால் நல்லது. 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி, 101 முதல் 200 க்கு இடையே இருந்தால் அது மிதமானது. 201 முதல் 300 இடையே இருந்தால் அது மோசமானது, 301 மற்றும் 400 இடையே இருந்தால் மிக மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications