டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களுக்கு அவ்வளவு சக்தி இல்லை.. டெல்லி கலவர வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.. காரசாரம்!

டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை நாளை மறுநாள் விசாரிப்பதாக தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பற்றி எரிந்த தலைநகர்... டெல்லியின் தற்போதைய நிலை என்ன

    டெல்லி கலவரம் நடந்து முடிந்து 4 நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் தலைநகரில் போகவில்லை
    டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

    டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கலவரத்தில் காயம் அடைந்த பலர் டெல்லியில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சி.ஏ.ஏ போராட்டம்- டெல்லி வன்முறைகள்- பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு சி.ஏ.ஏ போராட்டம்- டெல்லி வன்முறைகள்- பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

    டெல்லி கலவரம்

    டெல்லி கலவரம்

    கடந்த வாரம் டெல்லி கலவரத்திற்கு எதிரான வழக்கை டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் விசாரித்தார். இவர் பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று டெல்லி ஹைகோர்ட் நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் டெல்லி தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், சி ஹரிசங்கர் முன்னிலையில் டெல்லி கலவரம் விசாரிக்கப்பட்டது.

    கபில் மிஸ்ரா

    கபில் மிஸ்ரா

    இந்த வழக்கில் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது அப்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசு தரப்பு சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். பலர் இப்படி பேசி உள்ளனர். இதனால் எல்லோரும் மீதும் நடவடிக்கை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கூறினார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாத அவகாசம் கொடுத்து, வழக்கை டெல்லி தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், சி ஹரிசங்கர் அமர்வு அடுத்த ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    என்ன உத்தரவு

    என்ன உத்தரவு

    இந்த வழக்கில் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது அப்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசு தரப்பு சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். பலர் இப்படி பேசி உள்ளனர். இதனால் எல்லோரும் மீதும் நடவடிக்கை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கூறினார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாத அவகாசம் கொடுத்து, வழக்கை டெல்லி தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், சி ஹரிசங்கர் அமர்வு அடுத்த ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    தலைமை நீதிபதி யார்

    தலைமை நீதிபதி யார்

    இதை அடுத்து தலைமை நீதிபதி போப்டே, இதை உடனே விசாரிக்க வேண்டுமா ? இப்போது இதில் என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள். எங்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது. நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் . நாங்கள் சில விஷயங்களை விசாரிக்க முடியாது. சில விஷயங்களை தடுக்க முடியாது. எங்களுக்கு அந்த சக்தி இல்லை, நீங்கள் இதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    ஹர்ஷ் மாந்தர்

    ஹர்ஷ் மாந்தர்

    இதை கேட்டு ஹர்ஷ் மாந்தர் தரப்பு வழக்கறிஞர் கோலின், நீங்கள் அப்படி சொல்ல கூடாது. நாங்கள் உங்களை வழி நடத்த தயாராக இருக்கிறோம். நீங்கள் நினைத்தால், கோர்ட் நினைத்தால் நிலைமை மோசமாகாமல் தடுக்க முடியும் . அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதை தலைமை நீதிபதி போப்டே ஏற்றுக்கொண்டார். வழக்கை வரும் புதன் கிழமை விசாரிப்பதாக நீதிபதி போப்டே அறிவித்துள்ளார்.

    English summary
    Delhi Violence: SC agrees to hear Harsh Mander plea against Delhi HC order last week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X