டெல்லியில் பைக் சாகசத்தை கண்டித்த இளைஞரை கொலை செய்த 3 சிறுவர்கள் கைது- 28 முறை கத்தி குத்து!
டெல்லி: டெல்லியில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதை கண்டித்த இளைஞரை கத்தியால் குத்தி படுகொலை செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி ரகுவீர் நகர் பகுதியை சேர்ந்த மணீஷ் என்ற இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 3 சிறுவர்களை கண்டித்திருக்கிறார். அப்போது மணீஷுக்கும் சிறுவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது சிறுவர்கள் மூன்று பேரும் மணீஷை கத்தியால் குத்தி இருக்கின்றனர். இதனால் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த மணீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்/
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணீஷ் மரணமடைந்தார். இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் கத்தியால் குத்திய மூன்று சிறுவர்கள் சிக்கினர். இந்த மூன்று பேரும் மணீஷை 28 முறை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றனர். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications