டெல்லியில் தமிழர்களின் வீடுகள் ஜேசிபியால் இடிப்பு.. கண்ணீரில் ‛மதராஸி கேம்ப்’.. என்ன காரணம்?
டெல்லி: டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மதராஸி கேம்ப் பகுதியில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டி உள்ளதாக கூறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழர்களின் வீடுகள் ஜேசிபி வாகனத்தின் மூலம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால் வீடுகளை இழந்த மக்கள் குடும்பத்துடன் கதறி அழுது வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதற்கு டெல்லியும் விலக்கு அல்ல. டெல்லியிலும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அடங்கும்.

குறிப்பாக ஏழைகள் டெல்லியில் குடிசை பகுதிகளில் வசித்து வருகின்றனர். அதில் முக்கியமான இடம் ‛மதராஸி கேம்ப்'. இது ஜங்க்புரா பகுதியில் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தை சேர்ந்த மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஏழ்மையான தமிழர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் குடும்பத்தினரை எடுத்து கொண்டால் ஆண்கள் கூலி வேலைக்கு செல்கின்றனர். பெண்கள் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. மழைகாத்தில் வெள்ளம் ஏற்படுகிறது. இதற்கு ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்ற புகார்கள் எழுந்தது.
#WATCH | Demolition drive underway in Madrasi Camp in Delhi's Jangpura to remove illegal encroachment. Police force deployed on the spot. pic.twitter.com/aLoW782Cfh
— ANI (@ANI) June 1, 2025
இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் மதராஸி கேம்ப் உள்பட பராபுல்லா வடிகால் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் இன்று காலை முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கஷ்டப்பட்டு தாங்கள் கட்டிய வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் இடிப்பதை பார்த்து அங்குள்ள தமிழர்கள் கதறி அழுகின்றனர். மேலும் பலரும் தங்களின் மூட்டை முடிச்சுகளுடன் வீடுகளை காலி செய்து வருகின்றனர். இதனால் ‛மதராஸி கேம்ப்' பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications