முதல் டோஸ் ஒரு வேக்சின்.. 2வது டோஸ் வேறு வேக்சின்.. வேலூர் சிஎம்சியில் சோதனை.. DCGI திட்டம்?!
டெல்லி: கொரோனா வேக்சின் டோஸ்களை கலந்து போடுவது குறித்து ஆராய்ச்சி நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முதல் டோஸ் ஒருவகை கொரோனா வேக்சினும் இரண்டாவது டோஸ் இன்னொரு வகை கொரோனா வேக்சினும் போட்டு சோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில்தான் இதுவரை அதிக நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 5,50,52,291 பேருக்கு உத்தர பிரதேசத்தில் குறைந்தது ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. இதே உத்தர பிரதேசத்தில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன் வேக்சின் டோஸ்களை மாற்றி போட்டது பெரிய சர்ச்சையானது.
அங்கு சித்தாநகர் என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு கொரோனா வேக்சின் டோஸ்களை மாற்றி மாற்றி கொடுத்தது அம்பலம் ஆகியுள்ளது. அதாவது முதலில் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கோவிஷீல்ட் கொடுக்கப்பட்டு பின் இரண்டாவது டோஸாக கோவாக்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதிர்ச்சி
ஆம், முதலில் சிலருக்கு கோவிஷீல்ட் வேக்சின் போட்டுள்ளனர். அவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுக்கும் நாள் வந்த போது கோவிஷீல்ட் போடுவதற்கு பதிலாக கோவாக்சின் போட்டுள்ளனர். ஒருவர், இருவருக்கு இப்படி வேக்சின் போடப்படவில்லை. மொத்தமாக 20 பேருக்கு இப்படி வேக்சின் மாற்றி போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இந்த தவறு நேர்ந்துள்ளது. இவர்களுக்கு எப்படி வேக்சின் மாற்றி போடப்பட்டது என்று பார்க்கலாம்.

டைம்லைன்
ஏப்ரல் முதல் வாரம் இவர்களுக்கு ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கோவிட்ஷீல்ட் முதல் டோஸாக கொடுக்கப்பட்டு பின் இரண்டாவது டோஸாக பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் மே 14ல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லிஸ்ட் மாறி குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்படி வேக்சின் கலந்து கொடுக்கப்பட்டதால் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. வேக்சின் கலந்து போடப்பட்ட 20 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு பரபரப்பையும், விமர்சனங்களையும் சந்தித்து இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருந்தது.

சோதனை
உரிய சோதனை முடிவுகள் இன்று இப்படி வேக்சினை கலந்து போடுவது ஆபத்தில் முடியலாம் என்று உலக சுகாதார மைய ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது வேக்சின் டோஸ்களை கலந்து போடுவது குறித்து ஆராய்ச்சி நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் டோஸ் ஒரு வேக்சின், இரண்டாவது டோஸ் வேறு ஒரு வேக்சின் என்று கலந்து போடுவது குறித்து ஆராய்ச்சி நடத்த உள்ளதாக தகவல்கள் வருகிறது.

எங்கே?
முதல் கட்டமாக வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரியில் இது தொடர்பாக சோதனை நடத்த உள்ளனராம். 300 நபர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினை மாற்றி மாற்றி போட்டு சோதனை செய்ய உள்ளனர். மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஜூலை 29ம் தேதி இது தொடர்பாக கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்பு இதேபோன்ற சோதனையை ஐசிஎம்ஆர் நடத்தி இருந்தாலும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் புதிய சோதனையாக இதை மேற்கொள்ள உள்ளது.

ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர் சோதனையில் மருந்துகளை மாற்றி போடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகம் தூண்ட படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் இதில் ஆய்வு நடத்த உள்ளது. முன்னதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இது தொடர்பாக நடத்திய சோதனையில் கோவிஷீல்ட் வேக்சின் போட்டுவிட்டு பின் இரண்டாவது டோஸாக ஃபைசர் வேக்சின் போட்டால் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனை
இரண்டு டோஸ் கோவிஷீல்ட் போடுவதை விட ஒரு டோஸ் கோவிஷீல்ட் பின்னர் ஃபைசர் டோஸ் போட்டால் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கிறதாம். இந்த டோஸ்களுக்கு இடையில் 4 வாரம் இடைவெளி விட வேண்டும் என்று ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உடலில் உருவாகும் டி செல்கள், கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இரண்டும் அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சிறப்பான முடிவு
இதே சோதனையில் ஃபைசர் வேக்சின் போட்டுவிட்டு பின்னர் கோவிஷீல்ட் போட்டாலும் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என்று கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் கோவிஷீல்ட் அதன்பின் ஃபைசர் போட்டால்தான் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால் வேக்சின் தட்டுப்பாடு உள்ள நாடுகள் இந்த பயன்பாட்டு முறையை முயன்று பார்க்கலாம் என்று ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் கூறி இருந்தனர். தற்போது அதே போன்ற சோதனையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

தட்டுப்பாடு
இதன் மூலம் வேக்சின் தட்டுப்பாடுகளுக்கு முடிவு பிறக்கும். ஆம் முதல் டோஸ் கோவாக்சின் போட்டுவிட்டு இரண்டாவது டோஸ் கிடைக்காமல் இருப்பவர்கள் கோவிஷீல்ட் போட்டுக்கொள்ள முடியும். இரண்டாவது டோஸ் வேக்சினுக்காக மக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இந்த சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் இப்போதைக்கு வேக்சின்களை கலந்து போடுவது பாதுகாப்பு கிடையாது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் முழுமையாக சோதனை செய்து, முடிவுகளை வெளியிட்ட பின்பே வேக்சினை கலந்து போடுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications