கரண்ட் பில்லில் அதிரடி.. 200 யூனிட் வரை மின்சார கட்டணம் தள்ளுபடி.. இபி-யில் அரசின் அடுத்த சர்ப்ரைஸ்
டெல்லி: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு எத்தனையோ சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், மின்சார பயன்பாட்டிலும் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது நுகர்வோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இப்போதே களைகட்ட துவங்கிவிட்டது.. இந்த பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

சர்ப்ரைஸ்: ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அதாவது மோடி அரசு ஊழியர்களுக்கு (DA) 3% உயர்த்தியுள்ளது... மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் தீபாவளி போனஸ் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யும் சிறப்பு முயற்சியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் 200 யூனிட் வரையிலான நுகர்வுக்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் மின்சார கட்டண சுமையை குறைக்க பெரிதும் உதவும் என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் மின்கட்டணம் 200 யூனிட்டுக்குள் இருந்தால், மொத்தக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும். 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இது பொருந்தாது என்றும் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள்: எனவே, மின் நுகர்வோர்கள் இந்த திட்டத்தை பயன்பெற விரும்பினால், முதலில் இதற்குரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.. ஆதார் அட்டை, மின்சார பில், வருமானச் சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு எண் போன்றவை இதற்கு தேவைப்படும் ஆவணங்களாகும். மத்திய அரசு தந்துள்ள இந்த தீபாவளி ஸ்பெஷல், பொதுமக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
முன்னதாக, பொதுமக்களுக்கு சுமையாக உள்ள மின்கட்டண உயர்வை குறைக்கும் முயற்சியாக, "பி.எம். சூரியகர் - முப்த் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana)" என்ற வீட்டு கூரைகளில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு துவங்கியிருக்கிறது..
சபாஷ் வரவேற்பு: இந்த திடடம் சுமார் ஒரு கோடி பயனாளர்களுக்கு சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதை இலக்காகவும் கொண்டிருக்கிறது.. இத்திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்துக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும்.. உபரியாகும் மின்சாரத்தை மின் வாரியத்துக்கும் விற்கலாம் . மின் நிலையத்துக்கு ஏற்றாற்போல் மத்திய அரசு மானியம் வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications