திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. டெல்லி மருத்துவமனையில் அனுமதி!
டெல்லி : தி.மு.க ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற எம்.பிக்கள் அனைவரும் டெல்லியில் உள்ளனர். தி.மு.க ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவும் டெல்லியில் இருக்கிறார்.
திருச்சி சிவாவுக்கு ஏற்கனவே தோள்பட்டையில் வலி இருந்து வந்த நிலையில், நேற்று வலி அதிகமானதைத் தொடர்ந்து உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் திருச்சி சிவா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் திருச்சி சிவா தி.மு.கவின் சார்பில் ஐந்தாவது முறையாக எம்.பி-யாக இருக்கிறார். மாநிலங்களவை துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் திருச்சி சிவா.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். திருச்சி சிவா சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications