மேகதாது அணை: தமிழகத்துக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டேன்... திமுக எம்.பிக்களிடம் மோடி உறுதி
டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கும் விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டேன் என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்பதில் கர்நாடகா உறுதியாக உள்ளது. அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.

எடியூரப்பா கோரிக்கை
அப்போது, மேகதாது அணையை கட்டுவதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தி இருந்தார். ஆனால் கர்நாடகாவின் இந்த முயற்சிக்கு தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு
இந்நிலையில் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை திமுக எம்.பிக்கள் இன்று பிரதமர் மோடியிடம் கொடுத்தனர்.

தமிழகத்துக்கு கெடுதல் இல்லை
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மேகதாது அணை தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியிடம் கொடுத்தோம். இதற்கு பதிலளித்த மோடி, உங்கள் தலைவர் ஸ்டாலினிடம் சொல்லுங்கள்.. தமிழகத்துக்கு கேடுதரும் எந்த செயலையும் செய்யமாட்டோம் என உறுதியளித்தார் என்றார்.

முதல்வர் ஏன் சந்திக்கவில்லை?
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவில்லை என்றும் டி.ஆர். பாலு குறிப்பிட்டார். டி.ஆர். பாலுவுடன் திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications