மூடி மறைக்கும் மாநில கட்சிகள்.. 55% நன்கொடை நிதி வெளிப்படையாக இல்லை! திமுகவிற்கு கிடைத்தது எவ்வளவு?
டெல்லி: 2019-20ம் நிதியாண்டில், மாநில கட்சிகள் பெற்ற நன்கொடைகளில் சுமார் 55 சதவீதம், எங்கிருந்து வழங்கப்பட்டது என்ற அடையாளம் தெரியாத வகைகளில், கிடைத்தவை என்று, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு (ADR) தெரிவித்துள்ளது.
எங்கிருந்து வந்தது எனத் தெரியாத நன்கொடைகளில் 95 சதவீதம், எலக்ட்டோரல் பாண்ட்கள் மூலமாக பெறப்பட்டவை என்று அந்த அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:

அடையாளம் தெரியாத நன்கொடைகள்
2019-20ம் நிதியாண்டில், 25 மாநில கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை அளவு 803.24 கோடிகளாகும். இதில் ரூ.445.7 கோடி யார் வழங்கினார்கள் என்று தெரியாத நன்கொடையாகும். இதில் 426.233 கோடி ரூபாய் (95.616% அளவு) எலக்டோரல் பாண்ட்கள் மூலமும், 4.976 கோடி ரூபாய், தன்னார்வ நன்கொடை (voluntary contributions) என்ற வகையிலும் பெறப்பட்டுள்ளன.

தேசிய கட்சிகள்
2019-20 நிதியாண்டில் பெறப்பட்ட நன்கொடைகளில், 55% அளவுக்கு யார் வழங்கினார்கள் என்று அடையாளம் காட்டப்படாத நன்கொடைகளாகும். அதேநேரம், தேசிய கட்சிகள் இந்த கால கட்டத்தில் பெற்ற அடையாளம் காட்டப்படாத நன்கொடை 70.98% ஆகும். அதாவது மாநில கட்சிகளை விட தேசிய கட்சிகள் அதிகம் அடையாளம் காட்டாத வகைகளில் நன்கொடை பெற்றுள்ளன.

திமுக பெற்ற அடையாளம் காட்டாத நிதி
தென் மாநிலங்களைச் சேர்ந்த திமுக, மதசார்பற்ற ஜனதாதளம், டிஆர்எஸ், தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போன்றவை, அடையாளம் வெளிப்படுத்தாத நன்கொடைகளை அதிகம் பெற்றுள்ளன. திமுகவிற்கு அடையாளம் காட்டாத வகையில், 45.50 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது. டிஆர்எஸ் கட்சிக்கு 89.158 கோடி ரூபாய், தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.81.694 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு ரூ.74.75 கோடி, ஒடிசாவின் பிஜு ஜனதாதளம் கட்சிக்கு ரூ.50.586 கோடி அடையாளம் தெரியாத வகையில் வந்துள்ளது.

எப்படி கிடைக்கிறது
"தெரிந்த" நன்கொடையாளர்களிடமிருந்து பிராந்தியக் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் (தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து நன்கொடையாளர்களின் விவரங்கள் கிடைத்துள்ளன) 184.623 கோடி ரூபாய். இது அவர்களின் மொத்த வருமானத்தில் 22.98% ஆகும். உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி, பிரசுரங்களின் விற்பனை, கட்சி வரி போன்ற பிற அறியப்பட்ட ஆதாரங்களில் இருந்து அவர்கள் மேலும் ரூ.172.843 கோடி (மொத்த வருமானத்தில் 21.52%) பெற்றுள்ளனர்.

மொத்த வருமானம்
2018-19 நிதியாண்டில், 23 பிராந்தியக் கட்சிகள் தங்கள் வருடாந்திர தணிக்கை மற்றும் பங்களிப்பு அறிக்கைகளை தாக்கல் செய்ததை பகுப்பாய்வு செய்ததில், அவர்களின் மொத்த வருமானம் ரூ. 885.956 கோடியாக அதிகரித்தது என்று, ADR அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் ரூ. 481.276 கோடி (54.32%) தெரியாதவர்களிடமிருந்து வந்ததாம்.

தகவல் அறிய உரிமை வேண்டும்
"அரசியல் கட்சிகளின் வருமானத்தில் மிகப் பெரிய சதவீதத்தில், அதன் அசல் நன்கொடையாளர் யார் என்பது கண்டுபிடிக்க முடியாது என்பதால், அனைத்து நன்கொடையாளர்களின் முழு விவரங்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைக்க வகை செய்ய வேண்டியது அவசியம்" என்று ADR தெரிவித்துள்ளது.

கட்சிகள் காது கொடுக்குமா
இந்தியாவிலுள்ள எந்த அமைப்பாவது வெளிநாட்டு நிதியுதவி பெற்றால் அந்த அமைப்பு, நமது நாட்டில் நடைபெறும் தேர்தலில், எந்தவொரு வேட்பாளரையோ அல்லது கட்சியையோ ஆதரிக்கவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ அனுமதிக்கக்கூடாது என்றும் ADR அமைப்பு பரிந்துரைக்கிறது. "கூப்பன்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், உறுப்பினர் கட்டணம் போன்றவை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட வேண்டும்," என்றும் அது பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்த பரிந்துரைகளை அரசியல் கட்சிகள் ஏற்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
-
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்?












Click it and Unblock the Notifications