விளையாட்டு பல்கலைக்கழக மசோதா.. ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.. இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடக்கவுள்ளது.

தமிழ்​நாடு உடற்​கல்​வி​யியல், விளை​யாட்டு பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​தரை நியமிப்​பது மற்​றும் நீக்​கு​வதற்​கான அதி​காரத்தை அரசுக்கு வழங்​கும் சட்​டத் திருத்த மசோதா கடந்த ஏப்​ரல் 29ஆம் தேதி சட்டசபை​யில் நிறைவேற்​றப்​பட்​டது. இந்த மசோ​தாவை ஆளுநரின் ஒப்​புதலுக்கு தமிழக அரசு மே 5ஆம் தேதி அனுப்பி வைத்தது.

DMK vs governor

இதனையடுத்து ஆளுநர் மாநில அரசின் ஆலோ​சனையை மதிக்​காமல், யுஜிசி விதி​களுக்கு முரணாக இருப்​ப​தாகக் கூறி குடியரசுத் தலை​வரின் பரிசீலனைக்கு ஜூலை 14ஆம் தேதி அனுப்பி வைத்​தார். இதுதொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறது. தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் பி.வில்சன் மற்றும் ஹரீஷ் குமார் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தொழில்​நுட்ப கல்​வி, மருத்​து​வக் கல்​வி, பல்​கலைக்​கழகங்​கள் ஆகியவை பொதுப்பட்​டியலில் உள்​ள​தால், அந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​கும் அதி​காரம் ஆளுநருக்கு உள்​ளது. தவிர, அந்த பல்​கலைக்​கழகத்​தின் 2004ஆம் ஆண்டு சட்​டத்​துக்கு குடியரசுத் தலை​வர் கடந்த 2005 ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒப்​புதல் அளித்துள்​ளார்.

தற்போதைய சட்​டத்திருத்த மசோ​தா​வும் மத்​திய அரசின் சட்​டத்​துடன் முரண்​பட​வில்​லை. இதுதொடர்​பாக மாநில அமைச்​சரவையின் ஆலோசனையை அறிந்த பிறகும், யுஜிசி விதி​களுக்கு முரணாக உள்​ளது என ஆளுநர் கரு​தி​யுள்​ளார். இந்த விவ​காரத்திற்கு யுஜிசி விதி​கள் பொருந்தாது. உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களால் முடி​வான சட்​டத்தை மறந்​து​விட்டு, தமிழக அரசின் உண்மையான முயற்​சிகளுக்கு ஆளுநர் முட்​டுக்கட்டை போட்டு வரு​கிறார்.

இதனால் மேற்​கண்ட சட்​டத்திருத்த மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்பி வைத்​ததும், இதன் மீதான மேற்​படி நடவடிக்​கைகளை​யும் சட்​டத்துக்கு முரணானது என அறிவிக்க வேண்​டும். அந்த மசோ​தாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்ப யுஜிசிக்கு உத்​தர​விட வேண்​டும். அமைச்சரவையின் ஆலோ​சனைப்​படி மசோ​தாவை பரீசிலிக்க ஆளுநருக்​கும் உத்​தர​விட வேண்​டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான இப்ன்று உச்சநீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+