Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் கோர்ட்டில் வழக்குகள்.. தன்பாலின திருமணம்: எந்த நாடுகளில் எல்லாம் அனுமதி உள்ளது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வரும் மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்த விவாதங்களும் தொடங்கியுள்ள தற்போது உலக அளவில் எந்த நாடுகளில் எல்லாம் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி உள்ளது என்பதை இங்கே காணலாம்.

இந்தியாவில் தன்பாலின சேர்க்கை சட்ட விரோதம் இல்லை. இதற்கான சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

எல்ஜிபிடி கம்யூனிட்டி என்று சொல்லப்படுபவர்கள் மத்தியில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெறும் வரவேற்பு பெற்றது. எனினும், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்- அதாவது ஆண் மற்றொரு ஆணையும், பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறபோது அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை.

சிறப்பு திருமணச்சட்டம்

சிறப்பு திருமணச்சட்டம்

இதனால், ஐதராபாத்தை சேர்ந்த சுப்ரியோ சக்கரவர்த்தி- அபய் தங், டெல்லியைச் சேர்ந்த பார்த் பெரோஸ் மெஹரோத்ரா- உதய்ராஜ் ஆனந்த் ஆகிய ஆண் ஜோடிகள், தங்கள் திருமணத்துக்கு 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமணச்சட்டத்தின்படி சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல, கேரளா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக..

அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக..

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.

 எந்தெந்த நாடுகளில்..

எந்தெந்த நாடுகளில்..

இந்த வழக்குகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்தில் விசாரணைக்கு பட்டியலிடுமாறும நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி கோரி வழக்குகள் தாக்கப்பட்டு விரைவில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ள நிலையில் தற்போது எந்தெந்த நாடுகளில் எல்லாம் அனுமதி உள்ளது என்ற விவரத்தை காணலாம்.

10 நாடுகளில்

10 நாடுகளில்

அமெரிக்கவை சேர்ந்த LGBTQ பிரிவினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்பின் கூற்றுப்படி வெறும் 32 நாடுகளில் மட்டுமே தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கின்றன. இதில் பெரும்பாலான நாடுகளில் சட்டம் மூலமே அங்கீகாரம் கொடுக்கப்பட்டாலும் 10 நாடுகளில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் கடந்த 2015 ஆண்டு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்தது. எனினும் இந்த தீர்ப்புக்கு முன்பாகவே அமெரிக்காவில் 32 மாகாணங்களில் கே திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அமெரிக்காகவில் மாசசூசெட்ஸ் மாகாணம் தான் முதன் முதலாக தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது. கடந்த 2003- ஆம் ஆண்டே இந்த அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது.

அயர்லாந்து, சுவிட்சர்லாந்து..

அயர்லாந்து, சுவிட்சர்லாந்து..

ஆஸ்திரேலியா, அயர்லாந்து,சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் உள்ளது. ஆஸ்திரேலியாவில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கு பிறகு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு தன்பாலின திருமணத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்திலும் இதேபோல பெரும்பான்மை அடிப்படையில் எல்ஜிபிடிகியூ திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்க நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு தென் ஆப்பிரிக்காதான். கடந்த 2006- ஆம் ஆண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டது. தைவானில் 2019 ஆம் ஆண்டு ஓரின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்த முதல் ஆசிய நாடு தைவான் தான். 2017- ஆம் ஆண்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகு இந்த அங்கீகாரம் தைவானில் கொண்டு வரப்பட்டது.

அர்ஜெண்டினா

அர்ஜெண்டினா

அர்ஜெண்டினாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுத்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு அர்ஜெண்டினாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே அர்ஜெண்டினாவில் பல நகரங்களில் உள்ளூர் அமைப்புகள் அங்கீகாரம் கொடுத்தன.

கனடா

கனடா

தென் அமெரிக்க நாடான கனாடாவில் 1999 ஆம் ஆண்டு முதலே தன்பாலின திருமணத்திற்கு சட்ட பலன்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 2005- ஆம் ஆண்டு அந்த நாட்டு பாராளுமன்றத்தில் சட்ட ரீதியிலான அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+